சினிமா, விருது

பத்மபூஷன் விருதுக்கு என்னைவிட தகுதியானவர்கள் இருக்கிறார்கள்: நடிகர் கமல்ஹாசன்!

நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலருக்கு இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில்''பல்துறைகளில் திறமை கொழிக்கும் நாடு நம் நாடு. முக்கியமாக நான் பணியாற்றும் துறையில் திறமைசாலிகள், தகுதியானவர்கள் இருக்கையில் என் பெயர் பத்மபூஷன் பட்டியலில் இடம் பெற்றதை எனக்குக் கிடைத்த மிகப்பெரும் பேராக நான் கருதுகிறேன். அரசுக்கு நன்றி. தேர்வாளர்களுக்கு நன்றி. இந்தப் பட்டத்திற்கு தகுதியுள்ளவனாக இனிமேல்தான் ஆகவேண்டும் என்ற எண்ணம் என்னுள்… Continue reading பத்மபூஷன் விருதுக்கு என்னைவிட தகுதியானவர்கள் இருக்கிறார்கள்: நடிகர் கமல்ஹாசன்!

சினிமா

யுவன் சங்கர் ராஜா இசையில் முதன்முறையாக பாடல் எழுதுகிறார் வைரமுத்து!

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு நடிக்கும் இடம் பொருள் ஏவல் படத்தில் முதல்முறையாக இணைகிறார்கள் யுவன் சங்கர் ராஜாவும் வைரமுத்துவும். இந்தப் படத்தை லிங்குசாமி தயாரிக்கிறார்.

சினிமா

இளையராஜா நலம் பெற்று வரவேண்டும்! வைரமுத்து உருக்கமான பேச்சு

இளையராஜா விரைவில் உடல் நலம் பெற்றுவர வேண்டும் என்று கவிப்பேரரசு வைரமுத்து கங்காரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உருக்கமாகக் கூறினார். வி. ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி--எஸ். ரவிச்சந்திரன் தயாரிக்கும் படம் 'கங்காரு'. இது,'உயிர்' 'மிருகம்' 'சிந்து சமவெளி' படங்களைத் தொடர்ந்து சாமி இயக்கியுள்ள படம். அர்ஜுனா, வர்ஷா, ப்ரியங்கா, கஞ்சா கருப்பு, தம்பி ராமையா நடித்துள்ளனர். பிரபல பின்னணிப் பாடகர் ஸ்ரீநிவாஸ் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பாடல்கள் வைரமுத்து. 'கங்காரு' பாடல்கள்… Continue reading இளையராஜா நலம் பெற்று வரவேண்டும்! வைரமுத்து உருக்கமான பேச்சு

சினிமா

தங்கர் பச்சானின் ‘களவாடிய பொழுதுகள்’ : பிரத்யேக படங்கள்

என்றைக்கும் தன் வீரியத்தை இழந்துவிடாமல் ஒவ்வொரு இதயத்தையும் ஆட்டி வைத்து, சுக்கு நூறாக்கிப்போட்டுவிடும் ஆற்றல் காதலுக்கு மட்டுமே உண்டு. காலங்கள் எவ்வளவுதான் கடந்தாலும் என்றும் தன் குணத்தை மாற்றிக்கொள்ளாமல் இருப்பது காதல் மட்டுமே! எத்தனை பேரரசுகளை தவிடுபொடியாக்கியிருக்கிறது! அவ்வளவு வலிமையான காதல் சாதாரண மனிர்தகளை மட்டும் விட்டு வைத்து விடுமா? தினம், தினம் இதில் சிக்கித் தவிக்கும் இதயங்கள்தான் எத்தனை! மனிதர்களாய் பிறந்த ஒவ்வொருவருமே அதனைக்கடந்துதான் வரவேண்டியிருக்கிறது. சில நொடிகளில் வேர்விட்டு வளர்ந்துவிடுகிற காதல், எத்தனை ஆண்டுகள்… Continue reading தங்கர் பச்சானின் ‘களவாடிய பொழுதுகள்’ : பிரத்யேக படங்கள்

இந்த வார புத்தகங்கள், படிக்க... ரசிக்க

படிக்க… ரசிக்க… இந்த வார புத்தகங்கள்!

இனி ஒவ்வொரு வாரமும் சிறந்த புத்தகங்களை இந்தப் பகுதியில் அறிமுகப்படுத்த இருக்கிறோம். இவைதான் சிறந்த புத்தகங்கள் என்று புத்தகங்களின் மீது நாம் முத்திரையை போகிற போக்கில் குத்திவிட முடியாது. எல்லா வகையான புத்தகங்களும் வாசிக்கப்பட வேண்டியவைதான். அந்த வகையில் வெவ்வேறு தளங்களில், வெவ்வேறு பொருள்களில் எழுதப்பட்ட புத்தகங்களை இங்கே அறிமுகப் படுத்துகிறோம். உங்களுடைய கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள். கிளாசிக் நாவலான தி. ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ வாசித்துப் பாருங்கள். மனிதர்களின் ஆசாரங்களையும் விதிகளையும் உணர்வுகள் எப்படி சொல்கின்றன என்பதை… Continue reading படிக்க… ரசிக்க… இந்த வார புத்தகங்கள்!