காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

பீன்ஸ் தேங்காய் பால் கூட்டுடன் வரலாறு

காய்கறிகளின் வரலாறு – 26 பீன்ஸ் தென் அமெரிக்க நாடான பெருவை பூர்விகமாகக் கொண்ட பீன்ஸ், ஐரோப்பியர்கள் மூலம் மற்ற நாடுகளுக்குப் பரவியது. இந்தியாவை ஆக்கிரமித்திருந்த ஐரோப்பியர்களால் அறிமுகமான காய்கறிகளில் ஒன்று பீன்ஸ்.இன்று சீனா, இந்தோனேஷியா நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா அதிக அளவில் பீன்ஸை உற்பத்தி செய்கிறது. மலைப் பிரதேசங்களில் விளையும் செடிவகையிலிருந்து கிடைக்கும் இளம் காய்களே உணவில் பயன்படுத்தப்படுகின்றன. சமைக்காமலும் சமைத்தும் இந்தக் காய் உணவாகிறது. சிறந்த பீன்ஸை இனம் காண்பது எப்படி? இளம் காய்களே… Continue reading பீன்ஸ் தேங்காய் பால் கூட்டுடன் வரலாறு

Advertisements
காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, சமையல், சைவ சமையல்

சுவையுடன் புடலங்காய் பொரியல் செய்வது எப்படி?

காய்கறிகளின் வரலாறு –  16 புடலங்காய் புடலங்காய் பன்னெடும் காலமாக இந்தியாவில் உணவுக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தெற்காசிய பகுதியே இதன் பூர்வீகம். பாம்பு போன்ற வளைந்து நெளிந்த காய்களுக்காக இதை பாம்பு காய்(snake guard) என்று பொருள்படி உலக மொழிகளில் பலவற்றில் அழைக்கப்படுகிறது. புடலை என்பதற்கும் பாம்பு என்றே பொருள். இந்தியா முழுவதிலும் பல்வேறு வகையான சமையல்களில் பயன்படுத்தப்படுகிறது. நீளமான புடலங்காய் தற்போது வழக்கொழிந்து வருகிறது. ஒரு அடி நீளத்தில் உருளை வடிவத்தில் இருக்கும் காய்களே வியாபார ரீதியாக வளர்க்கப்பட்டு, விற்பனைக்கு… Continue reading சுவையுடன் புடலங்காய் பொரியல் செய்வது எப்படி?

காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, சமையல்

நேந்திரங்காய் சிப்ஸ் போடுவது எப்படி?

காய்கறிகளின் வரலாறு –  12 வாழைக்காய் பண்டைய தமிழர்களால் கொண்டாடப்பட்ட முக்கனிகளில் மூன்றாவது கனி வாழை. சமூக கலாச்சாரத்தோடு தொடர்பு படுத்தப்பட்ட காய்கனி வகைகளில் வாழை முதன்மையானது. வாழையின் பூர்வீகம் தென்கிழக்கு ஆசியா மற்றும் பப்புவா நியூகினியா என்கிறார்கள் ஆய்வாளர்கள். இந்தப் பகுதிகளில் மனிதர்கள் விவசாயம் செய்ய ஆரம்பித்த காலகட்டத்திலிருந்து வாழையை பயிரிட்டமைக்கான தொல்பொருள் சான்றுகள் கிடைத்திருக்கின்றன. வாழையின் இலை முதல், பூ, காய், கனி, தண்டு என அனைத்தையும் தொன்றுதொட்டு பயன்படுத்தியிருக்கிறார்கள் தென்னக மக்கள். வாழையை அதிக… Continue reading நேந்திரங்காய் சிப்ஸ் போடுவது எப்படி?

காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, சமையல்

தொன்மையான காய் இது!

காய்கறிகளின் வரலாறு –  9 மாங்காய் தெற்காசியாவை பூர்வீகமாகக் கொண்ட மா, இந்த காலநிலையை ஒத்த எல்லா நாடுகளிலும் இன்று பயிடப்படுகிறது. உலகத்தின் மொத்த மாங்கனி உற்பத்தியில் பாதியளவு இந்தியாவில் உற்பத்தியாகிறது. இந்தப் பெருமையைப் பெற்றுத்தருகின்றன தமிழகத்தில் உள்ள சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள். 400, 500 ஆண்டு வயதானாலும்கூட மாமரங்கள் காய்த்துக்கொண்டிருப்பதை உயிரியலாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். முக்கனிகளுள் ஒன்றாக பழந்தமிழ் இலக்கியங்களில் பாடப்பட்ட மாங்கனியின் காயை புளிப்புச் சுவைக்காக உண்ணுகிறோம். மாங்காயை ஊறுகாயாக்கி உண்ணும் பழக்கம் இரண்டாயிரம்… Continue reading தொன்மையான காய் இது!

காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை வளராது, கல்தான் வளரும்!

காய்கறிகளின் வரலாறு –  8 வெண்டைக்காய் ஆசிய,ஆப்பிரிக்க வெப்ப மண்டல மழைப் பொழியும் பகுதிகளில் விளையக்கூடிய காய்கறி வெண்டைக்காய். பொதுவாக வழங்கப்படும் ஒக்ரா என்கிற சொல் ஆப்பிரிக்க மூலச் சொல்லிருந்து வந்தது. அதனால் இதை ஆப்பிரிக்கர்களே முதலில் இதை உண்ணத் தொடங்கியிருக்கலாம். இன்று உலகம் முழுவதிலும் இந்தக் காயை உண்கிறார்கள். இந்தியா வெண்டைக்காய் உற்பத்தி செய்யும் நாடுகளில் முக்கிய இடத்தில் உள்ளது. பச்சை நிறத்தில் மட்டுமல்லாது வெளிர் ஊதா நிறத்திலும் வெண்டைக்காய் உற்பத்தியாகிறது. பொதுவாக தக்காளியில் உள்ள கால்சியம்… Continue reading வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை வளராது, கல்தான் வளரும்!