அறிவியல்/தொழிற்நுட்பம், தொழிற்நுட்பம்

சீன கிளையை மூடுகிறது அடோப் நிறுவனம்

அமெரிக்க மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான அடோப் சீனாவில் உள்ள தன்னுடைய கிளையை மூடுவதாக அறிவித்துள்ளது. வருமானம் ஈட்டுவதில் ஏற்பட்ட தொடர் சரிவே இந்த முடிவை எட்டக்காரணம் என இந்த நிறுவனம் தெரிவிக்கிறது. இதனால் 400 ஊழியர்கள் வேலையை இழக்கிறார்கள். சீன கிளையில் பணியாற்றிய 30 பேர் மட்டும் அமெரிக்க, இந்திய கிளைகளில் பணியாற்ற தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். ஹைதராபாத்தைச் சேர்ந்த சாந்தனு நாராயண், அடோப் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

சினிமா, Uncategorized

ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை தணிக்கை சான்றிதழ் வாங்கி 8 மாதங்கள் ஆகியும் ரிலீசாகவில்லை:சேரன் குமுறல்

‘‘நான் இயக்கியுள்ள ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை படம் தணிக்கைச் சான்றிதழ் பெற்று 8 மாதங்கள் ஆகியும் வெளியிட முடியாத நிலை உள்ளது. அப்படத்தை இன்றைய சூழலில் திரைக்கு கொண்டு வந்தால், அப்படத்தால் நான் பெற்ற கடனை அடைக்க முடியாது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக எடுத்த முடிவுதான் இது.’’ என்று தன் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார் இயக்குநர் சேரன். தன் ஆதங்கத்துக்கு முடிவு தேடும் விதமாக  ‘சினிமா டு ஹோம்’ என்ற நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார் சேரன்.… Continue reading ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை தணிக்கை சான்றிதழ் வாங்கி 8 மாதங்கள் ஆகியும் ரிலீசாகவில்லை:சேரன் குமுறல்

சுயதொழில், பெண் தொழில் முனைவு, வேலைவாய்ப்பு

சுயதொழில் செய்ய வழிகாட்டி!

வேலைவாய்ப்பு இன்றைய நவீன வாழ்க்கை சூழல் பல்வேறு புதிய புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிவருகிறது. குறிப்பாக சுயதொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் தற்சமயம் அதிகமாக உள்ளன. அந்த வகையில்  பிட்டர், வெல்டிங், குளிர்சாதனப் பெட்டி பழுது பார்த்தல், உணவு தயாரித்தல் உள்ளிட்ட துறைகள் உள்ள சுயதொழில் வாய்ப்புகள் குறித்த கண்காட்சி சென்னையில் நடைபெற உள்ளது. புதிய தலைமுறை அறக்கட்டளை நடத்தும் சுயதொழில்-2014 கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் ஜூன் 27 மற்றும் 28-ம் தேதி, சென்னை கிண்டி ஐடிஐ வளாகத்தில் நடைபெற… Continue reading சுயதொழில் செய்ய வழிகாட்டி!

சினிமா, தமிழ்ப்பெண், வேலைவாய்ப்பு

கோ-ஆப்டெக்ஸ் விளம்பரத்தில் நடிக்க தமிழ்ப் பெண்கள் தேவை!

வேலைவாய்ப்பு தமிழக அரசின் கைத்தறி நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ், தமிழ் மண்ணின் முகக்கூறுகள், நிறம் கொண்ட மாடலிங்கில் ஆர்வமுள்ள பெண்களை விளம்பரத்திற்காகத் தேடிக்கொண்டிருக்கிறது. ஆர்வமுள்ள 20 முதல் 25 வயதுக்குட்பட்ட பெண்கள் பாஸ்போர்ட் சைஸ் மற்றும் முழு அளவு புகைப்படத்துடன் கீழ்வரும் முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். விளம்பரப் பிரிவு, கோ-ஆப்டெக்ஸ் தலைமை அலுவலகம், 350, பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை- 8

குழந்தைகளுக்கான புத்தகங்கள், நேஷனல் புக் டிரெஸ்ட், வேலைவாய்ப்பு

நேஷனல் புக் டிரெஸ்டில் ஓவியக் கலைஞர்களுக்கு வாய்ப்பு!

வேலைவாய்ப்பு தகவல் மத்திய அரசின் புத்தக வெளியீட்டு நிறுவனமான நேஷனல் புக் டிரெஸ்ட், பல்வேறு இந்திய மொழிகளில் புத்தகங்களை வெளியிட்டு வருகிறது. நேருவின் பெயரில் குழந்தைகளுக்கான புத்தகங்களையும் வெளியிடுகிறது. குழந்தைகளுக்கான புத்தகங்களுக்காக ஓவியக் கலைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கிறது நேஷனல் புக் டிரெஸ்ட். திறமையுள்ளவர்கள் தங்கள் படைப்புகளுடன் office.nbt@nic.in என்ற இமெயில் முகவரியில் தங்களுடைய விவரங்களுடன் தொடர்பு கொள்ளலாம். http://nbtindia.gov.in/ என்ற இந்த இணையதளத்தில் மேல் தகவல்களைப் பெறலாம்.