வீட்டுத் தோட்டம்

உங்கள் வீட்டில் ரோஜா பூத்துக் குலுங்க வேண்டுமா?

தங்கள் வீட்டுத் தோட்டத்தில் ரோஜா பூத்துக் குலுங்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக இருக்கும். அந்த விருப்பத்தை நிறைவேற்ற இதோ சில வழிமுறைகள்... * தொட்டியில் ரோஜா செடி வளர்க்க விரும்புகிறவர்கள் குறைந்தபட்சம் இரண்டடி உயரமுள்ள தொட்டியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். * அதிகம் ஈரமிள்ளாத வளமான மண்ணைத் தொட்டியில் இட்டு, ரோஜா செடியை நடுங்கள். * பனிக்காலங்களில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறையும் கோடையில் தினமும் நீர் ஊற்றுங்கள். * ரோஜா செடி உள்ள தொட்டி உள்ள… Continue reading உங்கள் வீட்டில் ரோஜா பூத்துக் குலுங்க வேண்டுமா?

Advertisements
செய்து பாருங்கள், தோட்டம் போடலாம் வாங்க!, வீட்டுத் தோட்டம்

வீட்டின் நச்சுக்களை உறிஞ்சும் செடிகள்: மணி பிளாண்ட்

முன்பெல்லாம் ஒவ்வொரு வீட்டின் முன்புறமோ பின்புறமோ தோட்டம் இருக்கும். தோட்டச் செடிகளை பராமரிப்பது, வளர்ப்பது மனதுக்கு அமைதி தருவதோடு, அவை வாழ்க்கையின் அங்கமாக இருந்தன. இன்றைய வேகமான காலக்கட்டத்தில் அவைகளை வளர்க்க நேரமும் போதவில்லை; செடிகள் இருந்த இடமும் வாகனம் நிறுத்தும் இடமாகிவிட்டது. இதனால் நம்முடைய மன அமைதி போனதா என்று கேட்பவர்களுக்கு ஒரு விஷயத்தை சொல்லியாக வேண்டும்... நம்மைச் சுற்றியிருந்த இந்தச் செடிகள் குறைந்த காரணத்தால் நம்மைச் சுற்றி நச்சுத்தன்மை அதிகமாகிவிட்டது என்பதே அந்த விஷயம்!… Continue reading வீட்டின் நச்சுக்களை உறிஞ்சும் செடிகள்: மணி பிளாண்ட்

வீட்டுத் தோட்டம்

காக்டஸ் செடி வளர்ப்பும் பராமரிப்பும்!

காக்டஸ் எனப்படும் கள்ளிச் செடிகளை கடந்த 30 ஆண்டுகளாக வளர்த்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த லாசர். தற்போது 300 வகையான செடிகளை வைத்திருக்கிறார். நர்சரிகளைவிட குறைந்த விலையில் விற்பனையும் செய்கிறார். பல அரிய வகை செடிகள் இவரிடம் உள்ளன...காணோலியில் முழுமையான தகவலைப் பெறலாம்.. https://youtu.be/HaiiFUF_uhA

செய்து பாருங்கள், வீட்டில் வளர்க்கும் செடிகள், வீட்டுத் தோட்டம்

வில்வ மரம் வளர என்ன செய்ய வேண்டும்?

வில்வ மரம் வேகமாக, நன்றாக வளர என்ன செய்ய வேண்டும் என்று வாசகர் நந்தகுமார் கேட்டிருக்கிறார். வில்வ மரத்துக்கென்று பிரத்யேகமாக எதுவும் செய்யத் தேவையில்லை; மற்ற மரங்கள், செடிகளை வளர்க்கும் முறையிலேதான் இதையும் வளர்க்க வேண்டும். வில்வ செடி நடும் முன், ஓரளவுக்கு வெயில் விழக்கூடிய இடமாக இருக்க வேண்டும் என்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். அடுத்து, செடியின் அளவுக்கேற்ப, குழியைப் பறித்து அதில் மண்ணுடன் எழு கலந்து போட்டு அதில் செடியை நடுங்கள். மண்ணின் தன்மை, வெயிலின்… Continue reading வில்வ மரம் வளர என்ன செய்ய வேண்டும்?

தொட்டிச் செடி வளர்ப்பு, தொட்டிச் செடிகள், வீட்டுத் தோட்டம்

வீட்டுத் தோட்டம் – 30 நாட்களில் கொத்தவரைக் காய்!

மழைக்காலம் தொடங்கிவிட்டது இனி, வீட்டுத்தோட்டத்தில் புதிய செடிகள் நட ஆரம்பிக்கலாம். வெயில் ஓய்ந்த நிலையில், வீட்டிற்குத் தேவையான குறைந்தபட்ச அளவிலான காய்கறிகளையாவது நஞ்சு இல்லாமல் நாமே உற்பத்தி செய்து கொள்ளலாம். வீட்டில் வளர்க்க வேண்டிய காய்கறிகளில் நார்ச்சத்துக்காக பரிந்துரைக்கப்படுவது கொத்தவரை. இதை எளிதாக வளர்க்கலாம், 30 நாட்களிலேயே காய்களை பறிக்கலாம். விதைக்கும் முறை: ஒரு நடுத்தர அளவிலான தொட்டியில் மூன்று செடிகளை வளர்க்கலாம். தொட்டில் ஏற்கனவே மண் இருந்தால், அதைக் கீழே கொட்டி, கிளறி, அதில் ஏற்கனவே… Continue reading வீட்டுத் தோட்டம் – 30 நாட்களில் கொத்தவரைக் காய்!