இந்தியா, விருது

மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு!

பத்ம விருதுகள் 2015 கலை, சமூக சேவை மற்றும் விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானி, நடிகர் அமிதாப்பச்சன், நடிகர் திலீப்குமார், பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல், தமிழகத்தைச் சேர்ந்த அணு விஞ்ஞானி எம்.ஆர். சீனிவாசன் உள்ளிட்ட 9 பேருக்கு நாட்டின் உயரிய விருதான பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்படுள்ளது. முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமி, கர்நாடக இசைக் கலைஞர் சுதா… Continue reading மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு!

இந்தியா, உலகம், சமூகம்

இந்திய காவல்துறை பெண் அதிகாரிக்கு ஐ.நா.வின் அமைதிக் காப்பாளர் விருது

ஐ.நா.வின் சர்வதேச பெண்கள் காவல்துறையின் அமைதிக் காப்பாளர் விருது இந்திய காவல்துறை பெண் அதிகாரி சக்தி தேவிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஐ.நாவின் அமைதிப் பணியில் இணைந்து பணியாற்றி வரும் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர் சக்தி தேவி. இவர் தற்போது ஆப்கானிஸ்தானில் பணியாற்றி வருகிறார். ஆப்கானிஸ்தானில் நடந்த வன்முறைகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவுவதில் தலைசிறந்த பணியை ஆற்றியதற்காக சக்தி தேவிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

சினிமா, விருது

ஆவணப்பட இயக்குனர் ஆனந்த் பட்வர்தனுக்கு லெனின் விருது!

பிரபல ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்தனுக்கு 2014ஆம் ஆண்டுக்கான லெனின் விருது வழங்கப்படவிருக்கிறது. இந்த விருதை சென்னையைச் சேர்ந்த தமிழ் ஸ்டுடியோ வழங்குகிறது. மாற்று திரைப்பட கலைஞர்களையும், சுயாதீன திரைப்பட கலைஞர்களையும் கொண்டாடும் விதமாக தமிழ் ஸ்டுடியோ மூலம் வழங்கப்படும் படத்தொகுப்பாளர் பீ. லெனின் பெயரிலான விருது வழங்கப்படுகிறது. இந்த விழாவில் சிறப்பு விருதினர்களாக புத்ததேப் தாஸ் குப்தா (மேற்கு வங்க திரைப்பட இயக்குனர்), சஷி குமார் (சேர்மன், ஆசியன் காலேஜ் ஆப் ஜர்னலிசம்), திரைப்பட இயக்குனர்… Continue reading ஆவணப்பட இயக்குனர் ஆனந்த் பட்வர்தனுக்கு லெனின் விருது!

சினிமா, விருது

ஆஸ்கர் – கென்ய நடிகை லுபிடா நியாங்க் விருது பெற்றார்

பிரசித்திபெற்ற ஆஸ்கர் விருது நிகழ்வு தற்சமயம் நடந்து வருகிறது. முதல் விருதாக சிறந்த ஒலியமைப்புக்கான விருது கிராவிட்டி படத்திற்கு வழங்கப்பட்டது. அமெரிக்க அடிமைகள் வாழ்வை சித்தரித்த 12 இயர்ஸ் ஆஃப் ஸ்லேவ் படத்தில் நடித்த கென்ய நடிகை லுபிடா நியாங்க், சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது பெற்றார்.  சிறந்த துணை நடிகருக்கான விருது டல்லஸ் பையர்ஸ் கிளப் படத்தில் நடித்த ஜெரெட் லெட்டோவுக்கு வழங்கப்பட்டது.

இலக்கியம், சினிமா, விருது

விக்ரமாதித்யன் எண்பதுகளின் கலகலக்காரர்!

விளம்பரப் பட இயக்குநர்கள் ஜேடி-ஜெரி தந்தையர் ராபர்ட் ஆரோக்கியம் அறக்கட்டளை மூலமாக கடந்து ஐந்து வருடங்களாக இலக்கிய ஆளுமைகளுக்கு சாரல் இலக்கிய விருதை வழங்கிவருகின்றனர். எழுத்தாளர்கள் திலீப்குமார், ஞானக்கூத்தன், அசோகமித்திரன்,பிரபஞ்சன், வண்ணநிலவன்,வண்ணதாசன் ஆகியோர் இதுவரை இந்த விருதைப் பெற்றிருக்கிறார்கள். இந்த வருடம் கவிஞர் விக்ரமாதித்யனுக்கு வழங்கப்பட்டது. விருதுவிழாவில் எழுத்தாளர்கள் ஞானக்கூத்தன், யூமா வாசுகி, சுகுமாறன், இயக்குநர்கள் பாலா, கரு.பழனியப்பன், பத்திரிகை அதிபர் நக்கீரன் கோபால் ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய ஞானக்கூத்தன், ''கவிஞர் விக்ரமாதித்யன் எண்பதுகளில் கலகக்காரராக… Continue reading விக்ரமாதித்யன் எண்பதுகளின் கலகலக்காரர்!