சினிமா

ரசிகர்களை வேட்டையாடும் சதுரங்க வேட்டை!

வித்யாசமான திரைக்கதையில் வெளிவந்திருக்கும் சதுரங்க வேட்டை படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இயக்குநர் மனோபாலா தயாரித்திருக்கும் இந்தப் படத்தை புதுமுக இயக்குநர் வினோத் இயக்கியிருக்கிறார். பாலிவிட்டின் பிரபல ஒளிப்பதிவாளர் நட்டி இந்தப் படத்தின் முதன்மை கதாபாத்திரமாக நடித்திருக்கிறார். இஷாரா நாயகியாக நடித்திருக்கிறார். திருப்பதி பிரதர்ஸ் இந்தப் படத்தின் மூலம் இந்த ஆண்டின் ஹாட்ரிக் வெற்றியை பெற்றிருக்கிறது.