அரசியல், தமிழ்நாடு

பல்கலைக்கழக பணி நியமனங்களில் இடஒதுக்கீடு: குடியரசுத் தலைவர் உடனடியாகத் தலையிட தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

பல்கலைக்கழக பணி நியமனங்களில் இடஒதுக்கீடு செய்யப்படுவதில்லை என்றும் இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்த அறிக்கையில்,'தமிழகத்தில் 19 அரசு பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் பணிநியமனத்தில் அனைத்து மட்டத்திலும் முறையான இடஒதுக்கீடு கடைபிடிக்கப்படுவதில்லை. பல்கலைக் கழகங்களில் பயிற்றுவித்தல் மற்றும் பயிற்றுவித்தல் அல்லாத பிற பணியிடங்கள் அனைத்தையும் துணைவேந்தர் அவர்களே நிரப்பிக்கொள்ளும் அதிகாரம் படைத்த அமைப்பாகவே பல்கலைக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன.  பணி நியமனங்களில்… Continue reading பல்கலைக்கழக பணி நியமனங்களில் இடஒதுக்கீடு: குடியரசுத் தலைவர் உடனடியாகத் தலையிட தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

Advertisements
அரசியல், தமிழகம், தமிழ்நாடு

சாதி மோதல் உருவாக அரசே திட்டமிடுகிறது: உண்மை அறியும் குழு குற்றச்சாட்டு

தருமபுரியில் இளவரசன் நினைவு தினத்தையொட்டி 8  இளைஞர்கள் கைது செய்யப்பட்டதன் மூலம் அரசே சாதி மோதல் உருவாக திட்டமிடுகிறது என உண்மை அறியும் குழு குற்றம் சாட்டியிருக்கிறது. இளவரசன் நினைவு தினத்தையொட்டி ஆயுதப் பயிற்சி எடுத்ததாகக் கூறி 8 பேர் கைது செய்யப்பட்டது குறித்து உண்மை அறியும் குழு சார்பில் சென்னையில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் அ.மார்க்ஸ், வி.சீனிவாசன், பேராசிரியர். ஜி.கே.ராமசாமி, விநோத் ஆகியோர் இதுகுறித்து பேசினர். ‘தருமபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய், நத்தம் காலனியை… Continue reading சாதி மோதல் உருவாக அரசே திட்டமிடுகிறது: உண்மை அறியும் குழு குற்றச்சாட்டு