சினிமா

வாலு – முதல் பார்வை

சிம்பு, ஹன்சிகா, சந்தானம்,விடிவி கணேஷ் நடிக்கும் வாலு  நகைச்சுவை கலந்த ஆக்ஷன் படமாக உருவாகிவருகிறது. இயக்கம் : விஜய் சந்தர் இசை : தமன் ஒளிப்பதிவு: ஷக்தி படத்தொகுப்பு: டி.எஸ்.சுரேஷ் தயாரிப்பு : எஸ். எஸ். சக்ரவர்த்தி

இந்த வார ரிலீஸ் படங்கள், சினிமா, விஜய் சேதுபதி

இந்த வார ரிலீஸ் படங்கள்!

இந்த வாரம் ரம்மி, இங்க என்ன சொல்லுது, நினைத்தது யாரோ ஆகிய மூன்று படங்கள் வெளியாகின்றன். இதில் நினைத்தது யாரோ மற்றும் இங்க என்ன சொல்லுது இரண்டும் இன்று வெளியாகின்றன. ரம்மி நாளை வெளியாகிறது. ரம்மி முதல் படமான ‘தென்மேற்கு பருவகாற்று’ படத்திற்குப் பிறகு, விஜய் சேதுபதி மீண்டும் கிராமத்து கதையில் நடிக்கிறார். இன்னொரு கதாநாயகனாக இனிகோ பிரபாகர் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநயாகிகளாக காயத்ரி, ஐஸ்வர்யா இருவரும் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் சூரி நடிக்கிறார். படத்தின்… Continue reading இந்த வார ரிலீஸ் படங்கள்!

‘சரஸ்வதி சபதம்’, இந்த வார ரிலீஸ் படங்கள், கோலிவுட், சினிமா, சினிமா இசை

இந்த வார ரிலீஸ் படங்கள் – முன்னோட்டம்

வரும் வெள்ளிக்கிழமை (29-11-2013) விடியும் முன், ஜன்னல் ஓரம், நவீன சரஸ்வதி சபதம் ஆகியவை ரிலீஸ் ஆகின்றன. ஜன்னல் ஓரம் படத்தில் பார்த்திபன், விமல், விதார்த், ரமணா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். நாயகிகளாக பூர்ணா, மணிஷா யாதவ் நடித்திருக்கிறார்கள். கிராமத்து பின்னணியில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் இயக்குநர் கரு. பழனியப்பன். இசை வித்யாசாகர். ஹாலிவுட்டில் பெரும் வெற்றிப் பெற்ற ஹேங்கோவர் படத்தின் தழுவலான நவீன சரஸ்வதி சபதம் படத்தில் ஜெய்,விடிவி கணேஷ்,சத்யன்,ராஜ்குமார் நடித்திருக்கிறார்கள்.  நாயகி நிவேதிதா தாமஸ். நகைச்சுவை படமான… Continue reading இந்த வார ரிலீஸ் படங்கள் – முன்னோட்டம்

எக்ஸ்க்ளூசிவ் படங்கள், சினிமா

நவீன சரஸ்வதி சபதம் : எக்ஸ்க்ளூசிவ் படங்கள்

ஜெய்,விடிவி கணேஷ்,சத்யன்,ராஜ்குமார் நடித்து விரைவில் வரவிருக்கிறது நவீன சரஸ்வதி சபதம். இந்தப் படத்தில் நிவேதிதா தாமஸ் கதாநாயகியாக நடிக்கிறார். கல்பாத்தி அகோரம் தயாரிக்கும் இந்தப் படத்தை சந்ரு இயக்கியிருக்கிறார்.

சினிமா

சிம்புவின் வாலு எப்போ ரிலீஸ்?

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக படப்பிடிப்பில் இருக்கும் சிம்பு, ஹன்சிகா, சந்தானம்,விடிவி கணேஷ் நடிக்கும் வாலு இந்த தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அஜீத்தின் ஆரம்பம் ரிலீஸ் ஆகப்போவதை அறிந்து, அவர் மேல் இருக்கும் அபிமானத்தின் காரணமாக சிம்பு தன்படத்தின் ரிலீஸை தள்ளிவைத்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே படத்தின் விளம்பர யுத்தியாக சிம்பு, ஹன்சிகா காதல் என பரப்படுவதும் நடக்கிறது. நகைச்சுவை கலந்த ஆக்ஷன் படமாக உருவாகிவரும் வாலு, பொங்கலுக்கு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார். படக்குழு என்ன நினைக்கிறதோ?