சினிமா, பிரபலங்களின் திருமணம்

கேரள பிரபலங்கள் அணிவகுத்த நஸ்ரியா திருமணம்!

தமிழில்ட்நேரம் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நஸ்ரியா. தொடர்ந்து நய்யாண்டி, ராஜாராணி, வாயை மூடி பேசவும், திருமணம் என்னும் நிக்காஹ் படங்களில் நடித்தார். மலையாளத்தில் எல் பார் லவ் என்ற படத்தில் நடித்த போது பகத் பாசில்-நஸ்ரியா இருவருக்கும் காதல் மலர்ந்தது. இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் சம்மதித்து திருமணம் நிச்சயித்தனர். இவர்களின் திருமணம், திருவனந்தபுரத்தில், அல்சாஜ் ஆடிட்டோரியத்தில், இஸ்லாமிய முறைப்படி நேற்று நடந்தது. திருமண நிகழ்ச்சியில் மலையாள திரையுலகத்தினர், அரசியல் தலைவர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் மட்டுமே… Continue reading கேரள பிரபலங்கள் அணிவகுத்த நஸ்ரியா திருமணம்!

சினிமா, நடிகர்கள்

’எந்த வேலையையும் நாம உண்மையா நேசிச்சா, அது நம்மை கை விடாது!’ – நடிகர் காளி

“பீட்ஸா 2”, “உதயம் NH4”, “விழா”, “தடையறத் தாக்க”, “தெகிடி”, “கேரள நாட்டிளம் பெண்களுடனே”,  “வாயை  மூடி  பேசவும்”  போன்ற படங்கள் போன்ற படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தவர் நடிகர் காளி. ஒரு நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள தான் கடந்து பாதை குறித்து இங்கே பேசுகிறார் காளி. “கோவில்பட்டி  பக்கத்தில்  குவளையத்தேவன்பட்டி என்ற கிராமத்தில் இருந்து வந்த எனக்கு எட்டு வருடத்திற்கும் மேலான போராட்டத்திற்கு பிறகு தமிழ் சினிமாத்தாயின் செல்லப்பிள்ளைகளில் ஒருவனாக வலம் வரும் வாய்ப்பு… Continue reading ’எந்த வேலையையும் நாம உண்மையா நேசிச்சா, அது நம்மை கை விடாது!’ – நடிகர் காளி

சினிமா, நஸ்ரியா

தமிழில் வரவேற்பை எதிர்பார்க்கும் சல்மான்!

விளம்பரங்களில் கவனத்தை ஈர்த்திருக்கும் வாயை மூடி பேசவும் படம், நிறைய பேருக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முக்கியமாக இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் தமிழில் தனக்கு எப்படிப்பட்ட வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கிறார். மலையாளத்தில் உஸ்தாத் ஹோட்டல் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் சல்மான். புதிய கதைக்களன், சோதனை முயற்சிகளுக்கு தமிழ் சினிமா எப்போதும் இடம் அளித்துவருகிறது. தொழில் முறையில் தமிழ் சினிமா துறை பெரியது. இன்னொன்றையும் இங்கே சொல்ல விரும்புகிறேன். நான்… Continue reading தமிழில் வரவேற்பை எதிர்பார்க்கும் சல்மான்!

இசை வெளியீடு, சினிமா

மீண்டும் மதுபாலா!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு 90களின் நாயகி மதுபாலா வாயை மூடி பேசவும் என்ற தமிழ் படத்தில் நடிக்கிறார். நஸ்ரியா கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் மதுபாலா நடிக்கிறார். சமீபத்தில் நடந்த இசை வெளியீட்டில் கலந்து கொண்டார் மதுபாலா.