அரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள்

கருப்புப் பணம் பதுக்கி வைத்திருப்பவர்களின் முழு பட்டியல் இன்று வெளியாகிறது!

வெளிநாடுகளில் கருப்புப் பணம் பதுக்கி வைத்திருப்பவர்களின் முழு பட்டியலை இன்று தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணையில் தவறு தெரிய வராமல், எல்லா விவரங்களையும் அளிப்பது நாடுகள் இடையே ரகசியத்தன்மையை பாதிக்கும் என்ற அரசின் கருத்தை நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது. இதையடுத்து, வெளிநாட்டில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் விவரம் இன்று வெளியாகும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கறுப்புப் பணம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி தாக்கல் செய்த பொதுநல… Continue reading கருப்புப் பணம் பதுக்கி வைத்திருப்பவர்களின் முழு பட்டியல் இன்று வெளியாகிறது!

அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், தமிழ்நாடு

ஜெயலலிதா ஜாமின் மனு: கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் ஜாமின் மனு மீது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது. பகல் 12 மணியளவில் நீதிபதி சந்திரசேகர் முன், ஜாமின் மனு விசாரணைக்கு வருகிறது. அதனுடன் கீழ் நீதிமன்றத்தின் தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களும் விசாரிக்கப்பட உள்ளன. ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியும் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் பவானி சிங்கும் ஆஜராகின்றனர்.