அழியும் வரலாறு சென்னை திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன்பேட்டையில் தமிழ் தாத்தா உ.வே.சா. அவர்கள் வாழ்ந்த இல்லம் கடந்த மாதம் 13 ஆம் தேதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழுக்கு உ.வே.சாமிநாதய்யர் ஆற்றிய பணிகள் ஈடு இணையற்றவை. கும்பகோணம் மற்றும் சென்னை கல்லூரிகளில் தமிழாசிரியராக பணியாற்றியது மட்டுமின்றி, அழியும் நிலையில் இருந்த சீவக சிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம், புறநானூறு, திருமுருகாற்றுப்படை, பத்துப்பாட்டு, நெடுநல்வாடை உள்ளிட்ட 90க்கும் மேற்பட்ட இலக்கிய ஓலைச்சுவடிகளை புத்தகங்களாக… Continue reading அபார்ட்மெண்டுக்காக இடித்து தரைமட்டமான தமிழ் தாத்தா உ.வே.சா. இல்லம்!
Tag: வரலாறு
கோடை ஸ்பெஷல் – பலாக்காய் கூட்டு
காய்கறிகளின் வரலாறு – 24 பலாக்காய் முக்கனிகளுள் ஒன்றாக வரலாற்று காலம் முதல் தென்னக மக்களால் கொண்டாடப்பட்ட பலா. அதனால் தெரிந்துகொள்ளலாம் பலாவின் பூர்விகம் நம்மண்ணே என்று. 6லிருந்து 7ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே பலாவை உணவுப்பொருளாக பயன்படுத்தியதற்கான வரலாற்றுச் சான்றுகள் தொல்பொருள் ஆய்வில் கிடைத்துள்ளன. தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய மழைக்காடுகளில் வளரும் மரம் பலா. இதன் கனியின் சுவையை அறிந்துகொண்ட மனிதர்கள், அதை உணவுக்காகப் பயன்படுத்த ஆரம்பித்தனர். தென்னகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பலா… Continue reading கோடை ஸ்பெஷல் – பலாக்காய் கூட்டு
மணிமேகலை இயற்றப்பட்ட காலம் : ஓர் சர்ச்சை
புத்தம் ஓர் அறிமுகம் அறிஞர் மயிலை. சீனி வெங்கடசாமி (அறிஞர் மயிலை. சீனி வெங்கடசாமி எழுதிய பெளத்தமும் தமிழும் நூலின் கட்டுரைகளை பகுதி கட்டுரைகளாக பிரசுரித்து வருகிறோம். இந்த நூலின் பின் இணைப்புகளை கடந்த மூன்று பகுதிகளில் பார்த்தோம் அதன் தொடர்ச்சி…) மணிமேகலை நூலின் காலம் மணிமேகலையின் காலத்தை ஆதாரத்துடன் ஆராய்ந்து எழுதுவதென்றால் அது பெரியதோர் தனி நூலாக முடியும். ஆதலின், மிகச் சுருக்கமாக எழுதுவோம். மணிமேகலையும் சிலப்பதிகாரமும் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டவை என்பதே… Continue reading மணிமேகலை இயற்றப்பட்ட காலம் : ஓர் சர்ச்சை
தடை செய்யப்பட்ட புத்தகத்தில் அப்படி என்னதான் இருக்கிறது?
இன்றைக்கு ஆங்கில ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகியுள்ளார் வெண்டி டோனிகர்(Wendy Doniger). அமெரிக்க சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றும் 83 வயதான வெண்டி, கடந்த 40 வருடங்களாக இந்துத்துவம் குறித்து ஆய்வு செய்து வருபவர். சமஸ்கிருதத்தைக் கற்ற இவர் ரிக், மனு வேதங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். இவர் எழுதி சமீபத்தில் வெளியான புத்தகம், The Hindus: An Alternative History. இது வெளியாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் இந்தப் புத்தகம் இந்துக்களுக்கு எதிரானதாகவும் இந்துக்கள் மனதை புண்படுத்தும் கருத்துக்கள் உள்ளதாகவும்… Continue reading தடை செய்யப்பட்ட புத்தகத்தில் அப்படி என்னதான் இருக்கிறது?
கேரட்டின் வேர் ஆப்கானிஸ்தானில் இருக்கிறது!
காய்கறிகளின் வரலாறு – 6 கேரட் வேர்ப்பகுதி சதைப்பற்றுடன் உருவாகி உண்ணக்கூடியதாகவும் கிடைக்கும் செடிவகைகளில் கேரட்டும் ஒன்று. நம்மை ஆண்ட ஐரோப்பியர்கள் கேரட்டை அறிமுகப்படுத்தினார்கள் என்றுதான் பொதுவாக எல்லோரும் நம்பிக்கொண்டிருக்கிறோம். உண்மையில் கேரட்டின் பிறந்த இடம் நமக்கு அருகாமையில் இருக்கும் ஆப்கானிஸ்தானும் ஈரானும்தான். இங்கிருந்தே இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கும் ஐரோப்பாவுக்கும் கேரட்டை உணவாக்கும் வழக்கம் பரவியது. ஐரோப்பியர்கள் மூலமாக அமெரிக்க கண்டங்களுக்குப் பரவியது. இன்று கேரட்டை அதிகம் உண்டு தீர்ப்பது அமெரிக்கர்கள்தான். எந்தக் காய்கறியிலும்… Continue reading கேரட்டின் வேர் ஆப்கானிஸ்தானில் இருக்கிறது!