கல்வி - வேலைவாய்ப்பு, வணிகம்

அடுத்த 3 ஆண்டுகளில் இணைய வணிகத்தில் ஒன்றரை லட்சம் வேலை வாய்ப்பு!

அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் இணைய வணிகத்தில் குறைந்தது 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என அன்டல் இன்டர்நேஷனல் நெட்வொர்க் நிறுவனத்தின் இந்தியக் கிளை மேலாண் இயக்குனர் ஜோசப் தேவேஷியா தெரிவித்துள்ளார்.  அடுத்த 3 ஆண்டுகளில் 25 சதவிகித வளர்ச்சி ஏற்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது இத்துறை கிட்டத்தட்ட 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு கொண்டதாக உள்ளது எனவும், 2016ம் ஆண்டு வாக்கில், இது… Continue reading அடுத்த 3 ஆண்டுகளில் இணைய வணிகத்தில் ஒன்றரை லட்சம் வேலை வாய்ப்பு!

இந்தியா, வணிகம்

பான் கார்ட் விண்ணப்பிப்பது முதல் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது வரை அனைத்து வசதிகளையும் பெறக்கூடிய இணையதளம்!

பான் கார்டு விண்ணப்பிப்பது முதல் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது வரை வரி தொடர்பான எல்லா‌ வசதிகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் இணைய தளத்தை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இன்று தொடங்கி வைக்கிறார்.ஒற்றைச் சாளர முறை எனப்படும் ஒரே இடத்தில் அனைத்து சேவைகளையும் பெறக்கூடியதாக இந்த இணைய தளம் செயல்படும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. http://www.incometaxindia.gov.in என்ற ஏற்கனவே உள்ள இணையதளம் இதற்கென மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் வருமான வரித் துறை உயரதிகாரிகள்… Continue reading பான் கார்ட் விண்ணப்பிப்பது முதல் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது வரை அனைத்து வசதிகளையும் பெறக்கூடிய இணையதளம்!

தமிழ்நாடு, வணிகம்

தங்கம் விலை ரூ.20 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது!

பண்டிகை மற்றும் திருமணம் போன்ற சுப காரியங்களுக்கு ஏற்றவகையில் ஒரு மாதமாகவே தங்கம் விலை குறைந்து வருகிறது. தற்போது ஒரு சவரன் தங்கம் விலை ரூ.20 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்திருப்பது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது. திங்கட்கிழமை காலை நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.2,499க்கும், ஒரு சவரன் விலை ரூ.19,992 என்ற அளவுக்கும் குறைந்தது. 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.26,730க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் குறைந்து… Continue reading தங்கம் விலை ரூ.20 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது!

அரசியல், இந்தியா, வணிகம்

‘கடன் ஏய்ப்பாளர் விஜய் மல்லையா’!

கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ்' விமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் விஜய் மல்லையா, ரவி நெடுங்காடி, அனில் குமார் கங்குலி, சுபாஷ் குப்தே ஆகியோரை கடன் ஏய்ப்பாளர்களாக வங்கியின் குறைதீர்ப்புக் குழு (ஜி.ஆர்.பி.) அறிவித்துள்ளது’ என்று யுனைட்டெட் வங்கியின் செயல் இயக்குநர் தீபக் நரங் தெரிவித்தார். இதனால் கிங் ஃபிஷர்' நிறுவனம், அந்த வங்கியில் இனிமேல் கடன் வாங்கும் தகுதியை இழக்கிறது. மேலும், வரி ஏய்ப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள விஜய்மல்லையா உள்ளிட்டோரும் கடன் வாங்கும் தகுதியை இழப்பதுடன், எந்தவொரு நிறுவனத்திலும்… Continue reading ‘கடன் ஏய்ப்பாளர் விஜய் மல்லையா’!

வணிகம்

வங்கி கடனை கட்ட தவிர்க்கும் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் நிதி திரட்ட தடை : செபி தலைவர்

வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதை திட்டமிட்டு தவிர்க்கும் நிறுவனங்கள் பங்குசந்தை மூலம் இனி முதலீடு திரட்ட அனுமதிக்கப்படாது என செபியின் தலைவர் யூ கே சின்ஹா கூறியுள்ளார். இந்திய ரிசர்வ் வங்கி பரிந்துரையின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதேபோல தற்போது விசாரித்து வரும் வழக்குகளை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து செயல்பட முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.