இந்த வார ரிலீஸ் படங்கள், சினிமா

இந்த வார ரிலீஸ் படங்கள்

இந்த வாரம் தெனாலிராமன், டமால் டுமீல் ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின்றன.   கிட்டத்தட்ட இரண்டு  ஆண்டுகளாக படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் நடிகர் வடிவேலு நடித்து வெளிவந்திருக்கும் படம்தெனாலிராமன் . பெரும் பொருட்செலவில் நகைச்சுவை கலந்த சரித்திரப் படமாக தயாராகியிருக்கும் இந்தப் படத்தை யுவராஜ் தயாளன் இயக்கியிருக்கிறார். வைபவ், முதன்மையான கதாபாத்திரத்திரத்தில் நடித்திருக்கும் படம் டமால் டுமீல். நாயகியாக ரம்யா நம்பீசன் நடித்திருக்கிறார். சார்லி, ஷயாஜி ஷிண்டே, கோட்டா ஸ்ரீனிவாசராவ் நடித்துள்ள இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் ஸ்ரீ. இசை தமன்.

சினிமா

ஜகத்ஜால புஜபல தெனாலிராமன் மே ரிலீஸ்!

ஜகத்ஜால புஜபல தெனாலிராமன்  விடுமுறையை ஒட்டி மே மாதம் ரிலீஸாக இருக்கிறது. இந்தப் படத்தில் வடிவேலு தெனாலிராமன், மன்னர் என இருவேடங்களில் நடிக்கிறார். மிகுந்த பொருட்செலவில் தயாராகும் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார் டீ. இமான். படத்தில் மீனாட்சி தீட்சித் என்ற புதுமுகம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார் ஆரூர்தாஸ். படத்தை இயக்கியிருக்கிறார் யுவராஜ் தயாளன். தயாரிப்பு AGS எண்டர்டெயின்மெண்ட்ஸ்.

சினிமா, வடிவேலு

வடிவேலுவுக்கு கைக்கொடுக்குமா ஜகத்ஜால புஜபல தெனாலிராமன்?

கிட்டத்தட்ட இரண்டு  ஆண்டுகளாக படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் நடிகர் வடிவேலு அதிகம் நம்பியிருப்பது ஜகத்ஜால புஜபல தெனாலிராமன் படத்தைத்தான். பெரும் பொருட்செலவில் நகைச்சுவை கலந்த சரித்திரப் படமாக தயாராகிவரும், ஜ.பு.தெனாலிராமன் படத்தை யுவராஜ் இயக்குகிறார்.

சினிமா

திருமுருகன் இயக்கத்தில் மீண்டும் பரத், வடிவேலு!

திருமுருகன் இயக்கத்தில் பரத் வடிவேலு நடித்து சூப்பர் ஹிட்டான படம் எம் மகன். அதே வெற்றிக்கூட்டணி மீண்டும் புதிய படத்தில் இணைய உள்ளனர். இது பற்றி இயக்குனர் திருமுருகன், ’’மெட்டி ஒலி மூலம் எனக்கு கிடைத்த புகழ் எம் மகன் படத்திற்கும் கிடைத்தது. அதுபோல இப்போது நாதஸ்வரம் தொடருக்கு கிடைத்திருக்கும் புகழ் அடுத்த இயக்கவிருக்கும் படத்திற்கும் கிடைக்கும். இப்படத்தின் தலைப்பு மற்ற நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்’’ என்கிறார்.