சினிமா

அஞ்சான் :முதல் பார்வை

சூர்யா, சமந்தா, விதூத் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் உருவான அஞ்சான் ஆகஸ்ட் 15 ரிலீஸாகிறது. படத்தில் விதூத் வில்லனாக அல்ல சூய்ராவின் நண்பனாக வருகிறார். ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளன. இசை யுவன் சங்கர் ராஜா.

சினிமா

கமலின் உத்தம வில்லன் : முதல் பார்வை

லிங்குசாமி, கமல்ஹாசன் இணந்த தயாரிப்பில் உருவாகிவரும் உத்தம வில்லன் முதல் பார்வை விளம்பரங்கள் இன்று வெளியிடப்பட்டன. நாளை முதல் டிரெய்லர் வெளியாகிறது. நடிகர் கமல்ஹாசன் கதை, திரைக்கதை எழுதியிருக்கும் இந்தப் படத்தை நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கியிருக்கிறார். இசை ஜிப்ரான்.

சினிமா

யுவன் சங்கர் ராஜா இசையில் முதன்முறையாக பாடல் எழுதுகிறார் வைரமுத்து!

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு நடிக்கும் இடம் பொருள் ஏவல் படத்தில் முதல்முறையாக இணைகிறார்கள் யுவன் சங்கர் ராஜாவும் வைரமுத்துவும். இந்தப் படத்தை லிங்குசாமி தயாரிக்கிறார்.