இன்றைய முதன்மை செய்திகள், இலக்கியம், எழுத்தாளர்கள், பெண் எழுத்தாளர்

’எளிய மனிதர்களின் வாழ்க்கை எனக்கு மதிப்புக்குரியதாக இருக்கிறது’:ராமலக்ஷ்மி நேர்காணல்

இந்த மாத புத்தகமாக புகைப்படக் கலைஞரும் எழுத்தாளருமான  ராமலக்ஷ்மி எழுதிய இலைகள் பழுக்காத உலகம் கவிதைத் தொகுப்பை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். இணையத்தில் வலைத்தள பதிவராக நன்கு அறியப்பட்டவர் ராமலக்ஷ்மி. வீட்டுப் பொறுப்புகளில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் பெண்கள் ராமலக்ஷ்மியை மிகச் சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம்.  தன்னுடைய இளவயது புகைப்பட ஆர்வத்தை அப்படியே புதைத்துக் கொள்ளாமல் தன்னுடைய மத்திம வயதில் கைகளில் கேமராவுடன் களமிறங்கிய பெண்..! இன்று அறியப்பட்ட பெண் புகைப்படக் கலைஞராக வளர்ந்திருக்கிறார். அதுபோலவே இவருடைய எழுத்துப் பயணமும் குறிப்பிடத் தகுந்தது. எழுத்தாளர்… Continue reading ’எளிய மனிதர்களின் வாழ்க்கை எனக்கு மதிப்புக்குரியதாக இருக்கிறது’:ராமலக்ஷ்மி நேர்காணல்

சினிமா, புத்தக அறிமுகம், புத்தகம், பெண் எழுத்தாளர், பெண்ணியம்

புத்தகக்காட்சியில் பெண் படைப்பாளிகளின் புத்தகங்கள்!

குட்டிரேவதி இந்தப் புத்தகக்காட்சி(2014)க்கு வெளியாகியுள்ள பெண்களின் படைப்புகள் இவை. தற்கால இலக்கியப்படைப்பாக்கத்தில் பெண்களின் பங்கு அதிகமாவதை இது உறுதி செய்கிறது. பெரும்பாலான படைப்புகள் பெண்களின் முதல் நூலாகவும் அவை கவிதையாகவும் இருப்பது வியப்பைத் தருகிறது. 'போராட்ட வாழ்வியலாக' வந்துள்ள இரு நூல்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. அதே சமயம், நாவல், சிறுகதை, கவிதை, பயணநூல், கட்டுரைத்தொகுப்பு என வடிவங்களும் விரிந்துள்ளன. இங்கே, ஏதேனும் படைப்புகள் விடுபட்டிருந்தால் அது தற்செயலானதே. மன்னித்து, அந்தப்படைப்பையும் இங்கு பதிவு செய்ய நண்பர்கள் உதவினால்… Continue reading புத்தகக்காட்சியில் பெண் படைப்பாளிகளின் புத்தகங்கள்!