இந்த வார ரிலீஸ் படங்கள், சினிமா

இந்த வார ரிலீஸ் படங்கள்

இந்த வாரம் தெனாலிராமன், டமால் டுமீல் ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின்றன.   கிட்டத்தட்ட இரண்டு  ஆண்டுகளாக படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் நடிகர் வடிவேலு நடித்து வெளிவந்திருக்கும் படம்தெனாலிராமன் . பெரும் பொருட்செலவில் நகைச்சுவை கலந்த சரித்திரப் படமாக தயாராகியிருக்கும் இந்தப் படத்தை யுவராஜ் தயாளன் இயக்கியிருக்கிறார். வைபவ், முதன்மையான கதாபாத்திரத்திரத்தில் நடித்திருக்கும் படம் டமால் டுமீல். நாயகியாக ரம்யா நம்பீசன் நடித்திருக்கிறார். சார்லி, ஷயாஜி ஷிண்டே, கோட்டா ஸ்ரீனிவாசராவ் நடித்துள்ள இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் ஸ்ரீ. இசை தமன்.

சினிமா

டமால் டுமீல் : முதல் பார்வை

இதுவரை இரண்டாவது ஹீரோவாகவே வலம் வந்த வைபவ், முதன்மையான கதாபாத்திரத்திரத்தில் நடித்திருக்கும் படம் டமால் டுமீல். நாயகியாக ரம்யா நம்பீசன் நடித்திருக்கிறார். சார்லி, ஷயாஜி ஷிண்டே, கோட்டா ஸ்ரீனிவாசராவ் நடித்துள்ள இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் ஸ்ரீ. இசை தமன். சராசரி வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும் இளைஞன் வாழ்க்கையில் இரண்டு பேரால் ஏற்படும் திருப்பங்களை படமாக்கியிருக்கிறார் ஸ்ரீ.  

சினிமா

‘ரெண்டாவது படம்’ டிரெண்ட் செட்டராக இருக்கும்!

“தமிழ்படம்” புதுமாதிரியான காமெடி பாதையை போட்டு கொடுக்க இன்று அந்த பாதையில் பயணம் செய்து வெற்றிவாகை சூடிக் கொண்டிருகிரார்கள்  இயக்குனர்கள் பலர் அந்த பாதையை அடையாளம் காட்டிய அமுதன் இயக்கும் அடுத்த படம் “ரெண்டாவது படம்” இதில் இன்னொரு காமெடி பாதையை போட்டிருக்கிறேன்’’ என்கிறார் c.s.அமுதன் இந்த பாதை புது மாதிரியான வகையை சேர்ந்தது என்கிறார் அவர். விரைவில் படம் திரைக்கு வருகிறது. விமல், ரிச்சர்ட் , அரவிந்த் ஆகாஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக ரம்யா நம்பீசன்,… Continue reading ‘ரெண்டாவது படம்’ டிரெண்ட் செட்டராக இருக்கும்!

இனியா, சி.எஸ். அமுதன், சினிமா, ரம்யா நம்பீசன், ரெண்டாவது படம், விஜயலட்சுமி, விமல், வெங்கட் பிரபு

ரெண்டாவது படம் சூப்பர் ஹிட் ஆகுமா?

கொஞ்சம் சினிமா தமிழ்ப்படம் ஹிட் கொடுத்து கிட்டத்தட்ட 4 வருடங்களுக்குப் பிறகு தனது ரெண்டாவது படத்தை இயக்குகிறார் சி.எஸ். அமுதன். தன் விளம்பர நிறுவனத்தின்  வேலை பளு காரணமாகவே இத்தனை வருட இடைவெளி என்கிற அமுதன், இந்தப் படமும் முழுக்க முழுக்க வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவை படம் என்கிறார். படத்தில் விமல் நாயகன், ரம்யா நம்பீசன் நாயகி. விஜயலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நட்புக்காக வெங்கட் பிரபுவும் இனியாவும் ஒரு பாடலுக்கு வந்துபோகிறார்கள். பாடல்கள் ஹிட்டாகிவிட்ட நிலையில் படமும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிறது. படத்தின் பெயரைக் கேட்கிறீர்களா? ரெண்டாவது… Continue reading ரெண்டாவது படம் சூப்பர் ஹிட் ஆகுமா?