சினிமா

கோலிவுட் படத்தில் நர்கீஸ் ஃபக்ரி!

பாலிவுட்டில் ரன்பீர் கபூர், ஜான் ஆபிரஹாம், ஷாகித் கபூர் போன்ற பிரபல நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்தவர் நர்கீஸ் ஃபக்ரி. தற்போது இவர் முதன் முறையாக கோலிவுட்டில் நடிக்க இருக்கிறார். கதாநாயகியாக அல்ல, ஒரு பாடலில் மட்டுமே நடிக்கிறார்.  நடிகர் பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கும் சாகசம் படத்தில் நர்கீஸ் ஃபக்ரி பிரசாந்துடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார். அறிமுக இயக்குனர் அருண்ராஜ் வர்மா இயக்கும்  இந்தப் படத்தில் தமன் இசையில் இந்தப் பாடலை ஸ்ருதி ஹாசன் பாடியிருக்கிறார்.

அஞ்சலி, சினிமா

நடிகை ஸோரா ஷெகல் – அஞ்சலி

பிரபல நாடக கலைஞரும் நடிகையுமான ஸோரா ஷெகல் நேற்று மாரடைப்பால் உயிர் நீத்தார். அவருக்கு வயது 100. இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த ஸோரா, தன் இளம் வயதிலேயே பாரம்பரியமான  பழக்கவழக்கங்களிலிருந்து வேறுபட்டு தன் வாழ்க்கைப் பாதையை தேர்ந்தெடுத்துக் கொண்டவர். பட்டப்படிப்பு படித்தார், இங்கிலாந்து சென்று நடனம் கற்று உலக நாடுகளில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்தியாவுக்குத் திரும்பி புகழ்பெற்ற பிருத்வி தியேட்டர்ஸ் குழுவினருடன் பணியாற்றத் தொடங்கினார். தன்னைவிட 8 வயது இளையவரான அறிவியலாளர் காமேஸ்வர் ஷெகலை பலத்த… Continue reading நடிகை ஸோரா ஷெகல் – அஞ்சலி