இன்றைய முதன்மை செய்திகள், இலக்கியம்

எழுத்தாளர்களுக்கு அரசியல் பார்வை இயல்பாக இருக்கவேண்டும்: ஆர். அபிலாஷ் நேர்காணல்

  நாகர்கோவிலைச் சேர்ந்த ஆர். அபிலாஷ், ஆங்கில இலக்கியம் படித்தவர். நடக்க இயலாத மாற்றுத் திறனாளி பெண்ணைப் பற்றிய இவருடைய நாவலான ‘கால்கள்’ (உயிர்மை பதிப்பக வெளியீடு 2012) யுவபுரஸ்கார் விருதை இவருக்கு பெற்றுத் தந்திருக்கிறது. இன்றிரவு நிலவின் கீழ் என்ற ஹைக்கூ கவிதை தொகுப்பின் மூலம் தமிழ் இலக்கியத்துக்கு அறிமுகமான ஆர். அபிலாஷ்,  கட்டுரை, நாவல் என தன்னுடைய படைப்பு தளத்தை விரிவுபடுத்தியிருக்கிறார். குறிப்பாக பல்வேறு இதழ்களில் விளையாட்டுத் துறை தொடர்பான கட்டுரைகள் எழுதிவருகிறார். ’புரூஸ்லி… Continue reading எழுத்தாளர்களுக்கு அரசியல் பார்வை இயல்பாக இருக்கவேண்டும்: ஆர். அபிலாஷ் நேர்காணல்

Advertisements
இலக்கிய விருது, இலக்கியம்

எழுத்தாளர்கள் இரா.நடராசன் மற்றும் ஆர். அபிலாஷுக்கு சாகித்ய அகாதமி விருது!

இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது, தமிழகத்தைச் சேர்ந்த இரா. நடராஜன் மற்றும் ஆர். அபிலாஷ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சாகித்ய அகாதமி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், குழந்தைகளுக்கான சிறந்த படைப்புகளை உருவாக்கியவர்களுக்காக வழங்கப்படும் பால சாகித்ய அகாதமி விருதுக்கு, 24 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, தமிழில், விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள் என்ற படைப்பை எழுதிய இரா. நடராஜனுக்கு பால சாகித்ய அகாதமி விருது வழங்கப்படுகிறது. இதுகுறித்து எழுத்தாளர் இரா. நடராசன் பேசும்போது, ‘கடந்த 20… Continue reading எழுத்தாளர்கள் இரா.நடராசன் மற்றும் ஆர். அபிலாஷுக்கு சாகித்ய அகாதமி விருது!