சமையல், சைவ சமையல்

சம்மர் ஸ்பெஷல் – மோர் மிளகாய் போடுவது எப்படி?

வடாம் போடலாம் வாங்க – 3 காமாட்சி மகாலிங்கம் பெயர்தான்  மோர் மிளகாயே தவிர மிளகாய் ஊறுவதென்னவோ தயிரில்தான். ஊறுகாய் மிளகாயென்ற ஒரு பெயரும் உண்டு. எண்ணெயில் வறுத்துச் சாப்பாட்டு வகைகளுடன் சாப்பிட ஏற்றது. தஞ்சாவூர் குடமிளகாய் வகையில் செய்தோமானால் மிகவும் அருமையாக இருக்கும். இவ்விடம் சென்னையில் குட்டிக் குட மிளகாய் கிடைத்தது. பச்சை மிளகாயிலும், குடமிளகாயிலும் மோர் மிளகாய் செய்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ள  வந்திருக்கிறேன். வேண்டியவை: குடமிளகாய் - 3 டம்ளர்கள் தயிர் (கெட்டியானது) -… Continue reading சம்மர் ஸ்பெஷல் – மோர் மிளகாய் போடுவது எப்படி?

குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

மாலை நேர டிபன் – சேவை செய்வோமா?

மாலை நேர டிபன் காமாட்சி மகாலிங்கம் சேவை என்பது இடியாப்பம். எனக்கு இந்த பெயர் முன்பெல்லாம் தெரியாது. சேவை என்றே சொல்லி வழக்கம். இந்தப் பெயரும் நன்றாகவே இருக்கிறது. இதனுடன் கலக்கும் பொருளைக் கொண்டு பெயர் சொல்லுவோம். தேங்காய், எள், எலுமிச்சை,வெல்லம், தயிர்,காய்கறி, மோர்க்குழம்பு, தேங்காய்ப் பால் என பட்டியல் நீளும். இப்போது இடியாப்பம் குருமா தான் முதலிடத்தில் இருக்கிறது. நாம் முதலில் ப்ளெயின் சேவை தயாரிப்பதைப் பற்றி அதுதான் புழுங்கலரிசியில் தயாரிப்பதைப் பற்றி பார்ப்போம். வேண்டியது:… Continue reading மாலை நேர டிபன் – சேவை செய்வோமா?

சமையல், சாம்பார் செய்வது எப்படி?, சாம்பார் பெயர் வந்தது எப்படி?, சாம்பார் பொடி, செய்து பாருங்கள், தக்காளி ரசம், பாரம்பரிய ரெசிபி

பருப்புருண்டை ரசம்!

ருசி காமாட்சி மகாலிங்கம் பருப்புருண்டைக் குழம்பு என்று சொல்பவரா நீங்கள்?  எது சொன்னாலும் பரவாயில்லை. அதற்கேற்ப ருசியைமாற்றிஅமைத்துவிடலாம்.கிராமத்து சமையல்தானிதுவும். துவரம்பருப்பு கடையில் வாங்குகிறோமே அதை  வீட்டிலேயே ஒரு வருசத்திற்கு வேண்டியதை  தயாரிப்பது வழக்கம். துவரை வாங்கி முளைகட்டி, ஊறவைத்து, காயவைத்து, உடைத்து என ஒரு ஒர்க் ஷாப்பே செயல்படும். இந்நாளில் முளைகட்டி ஸ்ப்ரவுட்ஸ் என வழங்கப் படுவதை துவரையை பருப்பாக செய்யுமுன்னரே அதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். மொத்தமாக துவரையை வாங்கி ஊற வைப்பார்கள். இரவு தண்ணீரை வடித்துவிட்டு … Continue reading பருப்புருண்டை ரசம்!

காமாட்சி, சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல், பீன்ஸ் பருப்பு உசிலி

விருந்து சமையல்- பீன்ஸ் பருப்பு உசிலி!

 ருசியுங்கள் பருப்பு உசிலியை   கொத்தவரைக்காய், அவரைக்காய், பச்சை சுண்டைக்காய், குடமிளகாய்,வாழைப்பூ போன்ற எல்லாவற்றிலும் தயாரிக்கலாம். சைவ விசேஷ சமையல்களில், கட்டாயம் இதுவும் இடம் பெறுகிறது. இரண்டு கறிவகைகளில் ஒன்று இதற்காகவே ஒதுக்கப்படுகிறது. சாதாரணமாக வீட்டில் இந்த பருப்பு உசிலியைச் செய்தால், மோர்க்குழம்பு, வெந்தயக்குழம்பு,  ரசம் என சமையலை முடித்து விடுவோம். அதே விருந்து,கலியாண சமையல்கள் என்றால் எல்லாவற்றுடனும் இதுவும் ஒரு பாகமாக இருக்கிறது. பருப்புசிலியை தனித் துவரம்பருப்பிலும், கடலைப்பருப்பு, பயத்தம் பருப்பு என ஏதாவதொன்றை சமபாகமாகச் சேர்த்தும்,   நம்… Continue reading விருந்து சமையல்- பீன்ஸ் பருப்பு உசிலி!

சமையல், சீசன் சமையல், சைவ சமையல், நீங்களும் செய்யலாம், மோர்க்குழம்பு

அவசரமா மோர்க்குழம்பு செய்வது எப்படி?

ருசி -7 திடீர் என்று ஒரு மோர்க் குழம்பு செய்.ய வேண்டும். ருசியாகவும் இருக்கவேண்டும்.. கறிகாய்களுமில்லை. மோர்க்குழம்பில் வெங்காயம் சேர்த்துப் பழக்கமில்லை. யோசித்துக்கொண்டே இருப்பதைக் கொண்டு ஒரு ருசியான மோர்க்குழம்பு செய்துவிட்டேன். வட இந்தியாவில் செய்யும் கடி  என்ற மோர்க் குழம்பு டைப்பில்லை. ஆனாலும்  அதன் சாயல்தான்.  எல்லாம் சுலபம்தான். ருசித்து எழுதவும். வேண்டியதெல்லாம் 1. தயிர்-2 கப் (லேசான புளிப்புள்ளது) அரைப்பதற்கு வேண்டியது 2. பச்சைமிளகாய்-3 3. தனியா-1 டீஸ்பூன் 4. கடலைப்பருப்பு-2 அல்லது 3… Continue reading அவசரமா மோர்க்குழம்பு செய்வது எப்படி?