செய்து பாருங்கள், நீங்களும் செய்யலாம், மறுசுழற்சி, வீட்டில் வளர்க்கும் செடிகள், வீட்டுத் தோட்டம்

பிளாஸ்டிக் பாட்டில்களில் செடிகள் வளர்ப்பது எப்படி? வீட்டுத் தோட்டம் : சீசன் – 2

வீட்டுத் தோட்டம் : சீசன் - 2   பிளாஸ்டிக் பாட்டில்களின் மறுபயன்பாடு குறித்து அதிகம் பேசியாகிவிட்டது. இனி செயல்பட களத்தில் இறங்க வேண்டியதுதான். வீட்டுத் தோட்டம் அமைக்க தேவைப்படும் முதலீட்டில் முக்கால் பங்கு தொட்டிகளுக்காகவே செலவிட வேண்டியிருக்கிறது. அதை குறைக்க, பிளாஸ்டிக் பாட்டில்களை மறுபடியும் பயன்படுத்தலாம். பெரிய அளவில் வேர்பிடிக்கும் செடிகளை நட முடியாது எனினும், கீரைகள், முள்ளங்கி, வெற்றிலை, மணி பிளாண்ட் போன்றவற்றை பாட்டில்களில் வளர்க்கலாம். பாட்டில்களின் மேல்பக்கத்தை, பிளேடால் வெட்டிக் கொள்ளுங்கள். கனமான… Continue reading பிளாஸ்டிக் பாட்டில்களில் செடிகள் வளர்ப்பது எப்படி? வீட்டுத் தோட்டம் : சீசன் – 2

காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, சமையல், சைவ சமையல்

முள்ளங்கி மசாலா கறி!

காய்கறிகளின் வரலாறு –  13 முள்ளங்கி உண்பதற்குரிய வேர்காய் இனத்தைச் சேர்ந்தது முள்ளங்கி. முள்ளங்கியின் பூர்வீகம் ஐரோப்பா. ரோமானியர்கள் காலத்திற்கு முன்பே இது உண்ணத்தகுந்த காயாக பயன்பாட்டில் இருந்திருக்கிறது. அதே காலத்தில் ஆசிய பகுதிகளிலும் இது உண்ண பழக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். தற்போது உலகின் பல்வேறு நாடுகளிலும் இது விளைவிக்கப்பட்டு உணவில் பயன்படுத்தப்படுகிறது. உயிரியலாளர்கள் முள்ளங்கியில் ஏராளமான வகைகளை தோற்றுவித்திருக்கிறார்கள். நாம் பயன்படுத்தும் முள்ளங்கி, ஐரோப்பியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டவை. சமைப்பதற்கேற்ற முள்ளங்கி எது? முற்றிய முள்ளங்கியில் பஞ்சுபோன்ற பகுதி தோன்றியிருக்கும்.… Continue reading முள்ளங்கி மசாலா கறி!

சமையல், சீசன் சமையல், சுண்டல் வரிசை

மும்பை பீச் சுண்டல்

சுண்டல் வரிசை காமாட்சி மகாலிங்கம் இங்கே ஜூஹு பீச்சில் ஜெயின் மஸாலா என்று கிடைக்கும் இந்தச் சுண்டலை வீட்டில் செய்தேன். ஜெயின் சாப்பாட்டு சாமான்களில்  வெங்காயமிருக்காது. இது வெங்காயத்துடன் செய்ததுதான். சுண்டல் வகைதானிதுவும். நம் ஊரில் பீச்சில் மாங்காய், தேங்காய் சேர்த்து கடலை,பட்டாணி சுண்டல் கிடைக்கும். இங்கு இம்மாதிரி சுடச்சுட வெந்த ப்ரவுன்,கறுப்புக் கடலையுடன் வேறுவித மசாலாக்கள் சேர்த்துக் கொடுக்கிறார்கள். நான் அந்த இடத்திற்குப்போய் என்ன ஏது என்று கேட்டுக் கொண்டேன். அது இரண்டு வருஷத்திற்கு முன்.… Continue reading மும்பை பீச் சுண்டல்