காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, சமையல்

சுரைக்காய் கூட்டுடன் கொஞ்சம் வரலாறு

காய்கறிகளின் வரலாறு –  18 சுரைக்காய் ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட சுரைக்காயின் ஆசிய வருகை 8 அல்லது 9 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்ததாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. ஆப்பிரிக்க, ஆசிய பகுதிகளில் உணவுக்காக மட்டுமல்லாமல் முற்றி, பழுத்து, காய்ந்த சுரைக்காயின் ஓடுகள் நீர் உள்ளிட்ட உணவுப்பொருட்களை சேமித்து வைப்பதற்கும் உபயோகமாகிறது. இந்தப் பகுதிகளில் சுரைக்காய் ஓடுகளில் இசைக்கருவிகளும் செய்யப்படுகின்றன. இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் விளைச்சலும் அதிகம், பயன்பாடும் அதிகம். தம்புரா, ருத்ரவீணை உள்ளிட்ட இசைக்கருவிகள் சுரைக்காயின் ஓடுகளில்… Continue reading சுரைக்காய் கூட்டுடன் கொஞ்சம் வரலாறு

காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, சமையல்

சுண்டைக்காயின் வரலாறு ரெசிபியுடன்

காய்கறிகளின் வரலாறு –  17 சுண்டைக்காய் கத்தரிக்காய் இனத்தைச் சேர்ந்த சுண்டைக்காய், சித்த மருத்துவத்தில் மருத்துவ குணம் மிக்கதாக கருதப்படுகிறது. இது காட்டில் புதர்ச்செடியாக வளரும் சற்றே கசப்பு சுவை அதிகமாக இருக்கும். சமையலுக்காக தற்போது நாம் பயன்படுத்தும் சுண்டைக்காயின் பூர்வீகம் மத்திய அமெரிக்கா. ஐரோப்பியர்களால் ஆசிய, ஆப்பிரிக்க, ஆஸ்திரேலிய, பசிபிக் தீவுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. நம்மைப் போலவே ஜெமைக்கா, பசிபிக் தீவு நாடுகளில் சுண்டைக்காயை உணவில் விரும்பி சேர்த்துக்கொள்கின்றனர். காயாகவும் உலரவைத்தும் உண்ணும் பழக்கம் நம்மைப் போலவே இவர்களிடமும்… Continue reading சுண்டைக்காயின் வரலாறு ரெசிபியுடன்

காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, சமையல், சைவ சமையல்

முள்ளங்கி மசாலா கறி!

காய்கறிகளின் வரலாறு –  13 முள்ளங்கி உண்பதற்குரிய வேர்காய் இனத்தைச் சேர்ந்தது முள்ளங்கி. முள்ளங்கியின் பூர்வீகம் ஐரோப்பா. ரோமானியர்கள் காலத்திற்கு முன்பே இது உண்ணத்தகுந்த காயாக பயன்பாட்டில் இருந்திருக்கிறது. அதே காலத்தில் ஆசிய பகுதிகளிலும் இது உண்ண பழக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். தற்போது உலகின் பல்வேறு நாடுகளிலும் இது விளைவிக்கப்பட்டு உணவில் பயன்படுத்தப்படுகிறது. உயிரியலாளர்கள் முள்ளங்கியில் ஏராளமான வகைகளை தோற்றுவித்திருக்கிறார்கள். நாம் பயன்படுத்தும் முள்ளங்கி, ஐரோப்பியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டவை. சமைப்பதற்கேற்ற முள்ளங்கி எது? முற்றிய முள்ளங்கியில் பஞ்சுபோன்ற பகுதி தோன்றியிருக்கும்.… Continue reading முள்ளங்கி மசாலா கறி!

காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, சமையல், சைவ சமையல்

நூல்கோலில் ஒரு ரெசிபி – வெஜிடபிள் முகலாய்

காய்கறிகளின் வரலாறு –  10 நூல்கோல் மனிதர்களால் உருவாக்கப்பட்ட காய் நூல்கோல். ஜெர்மன் மொழியில் நூல்கோலைக் குறிக்கும் கோல்ராபி (kohlrabi) என்னும் சொல்லுக்கு முட்டைகோஸ் டர்னிப் என்று பொருள். ஒரே இனத்தைச் சேர்ந்த முட்டைகோஸ் மற்றும் டர்னிப் செடிகளின் தண்டுகளை இணைத்து ஜெர்மனியில் 16ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது இந்தச் செடி. ஆரம்ப காலங்களில் கால்நடைகளுக்கு தீவனமாக இது பயன்பட்டது. சுவையின் காரணமாக இதை மனிதர்களும் உண்ண ஆரம்பித்தனர். அயர்லாந்தில் கிபி 17ம் நூற்றாண்டில் உணவுக்காக முதன்முதலில் பயிரிடப்பட்டது. பிறகு… Continue reading நூல்கோலில் ஒரு ரெசிபி – வெஜிடபிள் முகலாய்

காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, சமையல்

பரங்கிக்காய் ஏப்படி பாரம்பரியமானது?

காய்கறிகளின் வரலாறு –  7 பரங்கிக்காய் பொங்கல் பண்டிகையின்போது புதுப்பானையில் பொங்கலிட்டு பரங்கிக்காய், அவரைக்காய் சேர்த்து செய்த கூட்டை படையலிட்டு சூரியனுக்கு படைப்பது தென்னக மக்களால் மரபாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. உண்மையில் பேருக்கு ஏற்றாற்போல் பரங்கிக்காய் பரங்கியர்களால் நம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட காய். வட அமெரிக்காவைப் பூர்விகமாகக் கொண்டது பரங்கி. அமெரிக்காவுக்குச் சென்ற ஐரோப்பியர்கள் மூலம் மற்ற நாடுகளுக்கும் அது பரவியது. மழை பொழிவு உள்ள காலநிலைகளில் வளரக்கூடியது என்பதால் இந்தியாவிலும் அது தனக்குரிய இடத்தைப் பிடித்துக்கொண்டது. பரங்கியின்… Continue reading பரங்கிக்காய் ஏப்படி பாரம்பரியமானது?