செய்து பாருங்கள்

துணி மறுபொருளாக்க பயிற்சி முகாம்!

பழைய துணியிலிருந்து மறுபொருள்களை உருவாக்கும் பயிற்சி முகாமை நடத்துகிறது குக்கூ காட்டுப்பள்ளி. “பிறந்த சிசுவை தாங்குவதற்கு என்றே தலைமுறை தலைமுறையாக குடும்பத்தில் ஒரு துணியினை பத்திரப்படுத்தும் மரபுவழக்கம் நமக்கிருக்கிறது. அதேசமயம், உலகளாவிய மனோபாவம் ஆடைகளையும் துணிகளையும் அதன் பயன்பாட்டு முடிவுக்கு முன்னமே தூக்கிப் புறமெறியும் போக்கையும் நமக்கு அறிமுகப்படுத்திவிட்டது. நெகிழிக்கு அடுத்து வீதியில் வீசப்படும் குப்பையாக துணிகள் மாறிவிட்ட நிலையில் பழைய துணியாடைகளை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொவரும் மறுபொருளாக்க பயிற்சிமுகாம் குக்கூ கற்றல் வட்டத்தில் இம்முறை நிகழ்கிறது.… Continue reading துணி மறுபொருளாக்க பயிற்சி முகாம்!

கண்காட்சி, சுற்றுச்சூழல்

“என்னைத் தூக்கிவிடுங்கள் அம்மா!” – குழந்தையின் அபயக்குரல்

ஞா.கலையரசி புதுவையில் 01/03/2015 முதல் 08/03/2015 வரை ஷில்பதரு (Shilpataru) கலைஞர்கள் குழு ஏற்பாடு செய்திருந்த கலைக் கண்காட்சியைக் காணும்  வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இந்நிகழ்ச்சிக்கு இவர்கள் தேர்ந்தெடுத்த கரு, ‘மறுசுழற்சி கலை’ என்பதாகும். நாம் குப்பை என்று தூக்கி வீசும் பொருட்கள், இவர்களின் படைப்புத் திறன் மூலம் கவின்மிகு கலைபடைப்புகளாக உருமாற்றம் பெற்றிருந்தன. நான் பார்த்து வியந்த கலைப் பொருட்களை, நீங்களும் பார்த்து மகிழுங்கள்... வாசலில் எச்.சண்முகம் என்பவர் அடுத்த அடி (Next step) என்ற… Continue reading “என்னைத் தூக்கிவிடுங்கள் அம்மா!” – குழந்தையின் அபயக்குரல்

செய்து பாருங்கள், நீங்களும் செய்யலாம், மறுசுழற்சி, வீட்டில் வளர்க்கும் செடிகள், வீட்டுத் தோட்டம்

பிளாஸ்டிக் பாட்டில்களில் செடிகள் வளர்ப்பது எப்படி? வீட்டுத் தோட்டம் : சீசன் – 2

வீட்டுத் தோட்டம் : சீசன் - 2   பிளாஸ்டிக் பாட்டில்களின் மறுபயன்பாடு குறித்து அதிகம் பேசியாகிவிட்டது. இனி செயல்பட களத்தில் இறங்க வேண்டியதுதான். வீட்டுத் தோட்டம் அமைக்க தேவைப்படும் முதலீட்டில் முக்கால் பங்கு தொட்டிகளுக்காகவே செலவிட வேண்டியிருக்கிறது. அதை குறைக்க, பிளாஸ்டிக் பாட்டில்களை மறுபடியும் பயன்படுத்தலாம். பெரிய அளவில் வேர்பிடிக்கும் செடிகளை நட முடியாது எனினும், கீரைகள், முள்ளங்கி, வெற்றிலை, மணி பிளாண்ட் போன்றவற்றை பாட்டில்களில் வளர்க்கலாம். பாட்டில்களின் மேல்பக்கத்தை, பிளேடால் வெட்டிக் கொள்ளுங்கள். கனமான… Continue reading பிளாஸ்டிக் பாட்டில்களில் செடிகள் வளர்ப்பது எப்படி? வீட்டுத் தோட்டம் : சீசன் – 2