சமணமும் தமிழும் : பகுதி-6 அறிஞர் மயிலை.சீனி வெங்கடசாமி பத்திரபாகு முனிவர் காலத்திலேதான் சமண சமயம் தமிழ் நாட்டிற்கு வந்தது என்பர். பத்திரபாகு முனிவர் கி.மு. 317 முதல் கி.மு. 297 வரையில் சமண சமயத் தலைவராக இருந்தார். இவர், சமணசமயத் தலைவராக இருந்ததோடல்லாமல், பேர்பெற்ற சந்திரகுப்தன் (கி.மு. 322 - 298) என்னும் மௌரிய அரசனுக்கு மத குருவாகவும் இருந்தார். இந்தச் சந்திரகுப்த மௌரியன் கிரேக்க அரசனாகிய மகா அலெக்சந்தர் காலத்தவன்; இந்தியாவை அரசாண்ட சக்கரவர்த்தி;… Continue reading சமணசமயம் தமிழ்நாடு வந்த வரலாறு!
Tag: மயிலை சீனி. வெங்கடசாமி
சமணரின் இல்லற ஒழுக்கம்!
சமணமும் தமிழும் : பகுதி-5 அறிஞர் மயிலை.சீனி வெங்கடசாமி ஆருகதரின் இல்லற ஒழுக்கம் ‘‘பாங்கமை செல்வராகிப் பகுத்துண்டு வாழ்தல் ஒன்றே தாங்கிய தவத்தின் மிக்க தவநிலை நிற்றல் ஒன்றே’’ என்று திருத்தக்கதேவர் தாம் அருளிய நரிவிருத்தத்தில் கூறியதுபோல, சமணசமயத்தில் இல்லறம் துறவறம் என இரண்டு அறங்கள் மட்டும் கூறப்படுகின்றன. சமணர்கள் இவ்வறங்களில் ஏதேனும் ஒன்றை மேற்கொள்ள வேண்டும். சமணரின் துறவற ஒழுக்கத்தை மேலே யதிதர்மம் என்னும் அதிகாரத்தினால் கூறினோம். ஈண்டுச் சாவகர் (சிராவகர்) எனப்படும் இல்லறத்தார்… Continue reading சமணரின் இல்லற ஒழுக்கம்!
மணிமேகலை இயற்றப்பட்ட காலம் : ஓர் சர்ச்சை
புத்தம் ஓர் அறிமுகம் அறிஞர் மயிலை. சீனி வெங்கடசாமி (அறிஞர் மயிலை. சீனி வெங்கடசாமி எழுதிய பெளத்தமும் தமிழும் நூலின் கட்டுரைகளை பகுதி கட்டுரைகளாக பிரசுரித்து வருகிறோம். இந்த நூலின் பின் இணைப்புகளை கடந்த மூன்று பகுதிகளில் பார்த்தோம் அதன் தொடர்ச்சி…) மணிமேகலை நூலின் காலம் மணிமேகலையின் காலத்தை ஆதாரத்துடன் ஆராய்ந்து எழுதுவதென்றால் அது பெரியதோர் தனி நூலாக முடியும். ஆதலின், மிகச் சுருக்கமாக எழுதுவோம். மணிமேகலையும் சிலப்பதிகாரமும் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டவை என்பதே… Continue reading மணிமேகலை இயற்றப்பட்ட காலம் : ஓர் சர்ச்சை
அகத்தியர் தமிழகத்தில் வாழ்ந்தவரா?
புத்தம் ஓர் அறிமுகம் அறிஞர் மயிலை. சீனி வெங்கடசாமி (அறிஞர் மயிலை. சீனி வெங்கடசாமி எழுதிய பெளத்தமும் தமிழும் நூலின் கட்டுரைகளை பகுதி கட்டுரைகளாக பிரசுரித்து வருகிறோம். இந்த நூலின் பின் இணைப்புகளை கடந்த மூன்று பகுதிகளில் பார்த்தோம் அதன் தொடர்ச்சி...) அகத்தியர் ' விடையுகைத்தவன் பாணினிக்கு இலக்கணம் மேனாள் வடமொழிக்குரைத் தாங்கு இயன்மலயமா முனிக்குத் திடமுறுத்தியம் மொழிக்கு எதிராக்கிய தென்சொல் மடமகட்கு அரங்கென்பது வழுதிநாடன்றோ? ' - திருவிளையாடற்புராணம்.… Continue reading அகத்தியர் தமிழகத்தில் வாழ்ந்தவரா?
கடற்காவல் தெய்வம் மணிமேகலை!
புத்தம் ஓர் அறிமுகம் அறிஞர் மயிலை. சீனி வெங்கடசாமி கடற்காவல் தெய்வம் மணிமேகலை சிலப்பதிகாரக் கதைத்தலைவனாகிய கோவலன் என்னும் வணிகன் மகளுக்கு மணிமேகலை என்பது பெயர். இந்த மணிமேகலையைப் பற்றித் 'தமிழ் நாட்டுப் பௌத்தப் பெரியார்' என்னும் அதிகாரத்தில் கூறியிருக்கின்றோம். இந்த மணிமேகலையைக் கதைத்தலைவியாகக் கொண்டு, அவளது வரலாற்றினைக் கூறும் சீத்தலைச்சாத்தனாரியற்றிய காப்பியத்துக்கும் 'மணிமேகலை' என்பது பெயர். இந்த நூலினைப்பற்றித் 'தமிழ்ப்பௌத்த நூல்கள்' என்னும் அதிகாரத்தில் கூறியிருக்கின்றோம். * இங்கு 'மணிமேகலை' என்னும் கடல் தெய்வத்தைப் பற்றி… Continue reading கடற்காவல் தெய்வம் மணிமேகலை!