அரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள்

கருப்புப் பணம் பதுக்கி வைத்திருப்பவர்களின் முழு பட்டியல் இன்று வெளியாகிறது!

வெளிநாடுகளில் கருப்புப் பணம் பதுக்கி வைத்திருப்பவர்களின் முழு பட்டியலை இன்று தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணையில் தவறு தெரிய வராமல், எல்லா விவரங்களையும் அளிப்பது நாடுகள் இடையே ரகசியத்தன்மையை பாதிக்கும் என்ற அரசின் கருத்தை நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது. இதையடுத்து, வெளிநாட்டில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் விவரம் இன்று வெளியாகும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கறுப்புப் பணம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி தாக்கல் செய்த பொதுநல… Continue reading கருப்புப் பணம் பதுக்கி வைத்திருப்பவர்களின் முழு பட்டியல் இன்று வெளியாகிறது!

Advertisements
அரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள்

குழந்தை இறப்பு விபத்துகளை ஏற்படுத்துவோருக்கு 7 ஆண்டு சிறை : புதிய மோட்டார் வாகன மசோதா

குழந்தை இறப்புக்கு காரணமாகும் விபத்துகளை ஏற்படுத்துவோருக்கு ரூ.3 லட்சம் அபராதத்துடன், 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தால் தயாரிக்கப்பட்ட "புதிய சாலை பாதுகாப்பு, போக்குவரத்து மசோதா-2014' பல்வேறு தரப்பினரின் கருத்துகளை அறிந்து கொள்வதற்காக சனிக்கிழமை வெளியிடப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 5 லட்சம் சாலை விபத்துகள் நேரிடுகின்றன. இதில் 1.4 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். பலி எண்ணிக்கையை கட்டுப்படுத்தும்… Continue reading குழந்தை இறப்பு விபத்துகளை ஏற்படுத்துவோருக்கு 7 ஆண்டு சிறை : புதிய மோட்டார் வாகன மசோதா

அரசியல், இந்தியா, பெண், பெண்கள் பாதுகாப்பு

‘நிர்பயா’ மையம் மாநில அரசின் ஒப்புதலுக்கு காத்திருக்கிறது: மேனகா காந்தி

பாலியல் கொடுமைக்கு ஆளாகும் பெண்களுக்கு உதவும் ‘நிர்பயா’ மையங்களை நாடு முழுவதும் தொடங்குவதற்கு அந்தந்த மாநில அரசுகளின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் மேனகா காந்தி கூறினார். ஒரு நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருக்கும் மேனகா காந்தி செய்தியாளர்களிடம் இதை தெரிவித்தார். மேலும் அவர்,‘பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்களுக்கு மருத்துவ உதவி, காவல்துறை உதவி, மன நல ஆலோசனை, சட்ட உதவி மற்றும் தாற்காலிக தங்குமிடம் ஆகியவற்றை ஒரே இடத்தின் கீழ்… Continue reading ‘நிர்பயா’ மையம் மாநில அரசின் ஒப்புதலுக்கு காத்திருக்கிறது: மேனகா காந்தி

சினிமா, விருது

பத்மபூஷன் விருதுக்கு என்னைவிட தகுதியானவர்கள் இருக்கிறார்கள்: நடிகர் கமல்ஹாசன்!

நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலருக்கு இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில்''பல்துறைகளில் திறமை கொழிக்கும் நாடு நம் நாடு. முக்கியமாக நான் பணியாற்றும் துறையில் திறமைசாலிகள், தகுதியானவர்கள் இருக்கையில் என் பெயர் பத்மபூஷன் பட்டியலில் இடம் பெற்றதை எனக்குக் கிடைத்த மிகப்பெரும் பேராக நான் கருதுகிறேன். அரசுக்கு நன்றி. தேர்வாளர்களுக்கு நன்றி. இந்தப் பட்டத்திற்கு தகுதியுள்ளவனாக இனிமேல்தான் ஆகவேண்டும் என்ற எண்ணம் என்னுள்… Continue reading பத்மபூஷன் விருதுக்கு என்னைவிட தகுதியானவர்கள் இருக்கிறார்கள்: நடிகர் கமல்ஹாசன்!