அறிஞர் மயிலை. சீனி வெங்கடசாமி, ஆய்வு, சமணமும் தமிழும்

சமணசமயம் தமிழ்நாட்டில் ஏன் செல்வாக்கடைந்தது?

சமணசமயம் சிறப்படைந்த வரலாறு சமணமும் தமிழும் – 7 அறிஞர் சீனி. வெங்கடசாமி பண்டைக் காலத்திலே சமணசமயம் தமிழ்நாடு முழுவதும் பரவி நிலைபெற்றிருந்தது. பரவியிருந்ததுமட்டுமல்லாமல் செல்வாக்குப் பெற்றும் இருந்தது. இந்தச் சமயம் தமிழ் நாட்டிலே வேரூன்றி தழைத்துக் தளிர்த்து இருந்ததைத் தேவராம், நாலாயிரப் பிரபந்தம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலிய பிற்காலத்து நூல்களும், மணிமேகலை, சிலப்பதிகாரம் முதலிய சங்ககாலத்து நூல்களும் தெரிவிக்கின்றன. இலக்கியச் சான்று மட்டுமல்லாமல், சாசனங்களும் அழிந்தும் அழியாமலும் காணப்படுகிற சமணக் கோயில்களும் காடுமேடுகளில்… Continue reading சமணசமயம் தமிழ்நாட்டில் ஏன் செல்வாக்கடைந்தது?

Advertisements
இலக்கியம், தமிழ்நாடு

அபார்ட்மெண்டுக்காக இடித்து தரைமட்டமான தமிழ் தாத்தா உ.வே.சா. இல்லம்!

அழியும் வரலாறு சென்னை திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன்பேட்டையில்  தமிழ் தாத்தா உ.வே.சா. அவர்கள் வாழ்ந்த இல்லம்  கடந்த மாதம் 13 ஆம் தேதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழுக்கு உ.வே.சாமிநாதய்யர் ஆற்றிய பணிகள் ஈடு இணையற்றவை. கும்பகோணம் மற்றும் சென்னை கல்லூரிகளில் தமிழாசிரியராக பணியாற்றியது மட்டுமின்றி, அழியும் நிலையில் இருந்த சீவக சிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம், புறநானூறு, திருமுருகாற்றுப்படை, பத்துப்பாட்டு,  நெடுநல்வாடை உள்ளிட்ட 90க்கும் மேற்பட்ட இலக்கிய ஓலைச்சுவடிகளை புத்தகங்களாக… Continue reading அபார்ட்மெண்டுக்காக இடித்து தரைமட்டமான தமிழ் தாத்தா உ.வே.சா. இல்லம்!

ஆன்மீகம், புத்தம் : ஓர் அறிமுகம், புத்தம்: ஓர் எளிய அறிமுகம்!, பௌத்த மதம், பௌத்த மதம் தமிழ்நாடு வந்த வரலாறு, பௌத்தம், பௌத்தம் தமிழ் நாட்டில் வளர்ச்சிபெற்ற வரலாறு!, மயிலை சீனி. வெங்கடசாமி

மணிமேகலை இயற்றப்பட்ட காலம் : ஓர் சர்ச்சை

புத்தம் ஓர் அறிமுகம் அறிஞர் மயிலை. சீனி வெங்கடசாமி (அறிஞர் மயிலை. சீனி வெங்கடசாமி எழுதிய பெளத்தமும் தமிழும் நூலின் கட்டுரைகளை பகுதி கட்டுரைகளாக பிரசுரித்து வருகிறோம். இந்த நூலின் பின் இணைப்புகளை கடந்த மூன்று பகுதிகளில் பார்த்தோம் அதன் தொடர்ச்சி…) மணிமேகலை நூலின் காலம் மணிமேகலையின் காலத்தை ஆதாரத்துடன் ஆராய்ந்து எழுதுவதென்றால் அது பெரியதோர் தனி நூலாக முடியும். ஆதலின், மிகச் சுருக்கமாக எழுதுவோம். மணிமேகலையும் சிலப்பதிகாரமும் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டவை என்பதே… Continue reading மணிமேகலை இயற்றப்பட்ட காலம் : ஓர் சர்ச்சை

அறிஞர் மயிலை. சீனி வெங்கடசாமி, ஆன்மீகம், புத்தம் : ஓர் அறிமுகம், புத்தம்: ஓர் எளிய அறிமுகம்!, பௌத்த மதம், பௌத்த மதம் தமிழ்நாடு வந்த வரலாறு, பௌத்தம், பௌத்தம் தமிழ் நாட்டில் வளர்ச்சிபெற்ற வரலாறு!

அகத்தியர் தமிழகத்தில் வாழ்ந்தவரா?

புத்தம் ஓர் அறிமுகம் அறிஞர் மயிலை. சீனி வெங்கடசாமி (அறிஞர் மயிலை. சீனி வெங்கடசாமி எழுதிய பெளத்தமும் தமிழும் நூலின் கட்டுரைகளை பகுதி கட்டுரைகளாக பிரசுரித்து வருகிறோம். இந்த நூலின் பின் இணைப்புகளை கடந்த மூன்று பகுதிகளில் பார்த்தோம் அதன் தொடர்ச்சி...) அகத்தியர்         ' விடையுகைத்தவன் பாணினிக்கு இலக்கணம் மேனாள்          வடமொழிக்குரைத் தாங்கு இயன்மலயமா முனிக்குத்          திடமுறுத்தியம் மொழிக்கு எதிராக்கிய தென்சொல்          மடமகட்கு அரங்கென்பது வழுதிநாடன்றோ? '                                    - திருவிளையாடற்புராணம்.… Continue reading அகத்தியர் தமிழகத்தில் வாழ்ந்தவரா?

அறிஞர் மயிலை. சீனி வெங்கடசாமி, புத்தம் : ஓர் அறிமுகம், புத்தம்: ஓர் எளிய அறிமுகம்!, பௌத்த மதம், பௌத்த மதம் தமிழ்நாடு வந்த வரலாறு, பௌத்தம், பௌத்தம் தமிழ் நாட்டில் வளர்ச்சிபெற்ற வரலாறு!, மயிலை சீனி. வெங்கடசாமி

கடற்காவல் தெய்வம் மணிமேகலை!

புத்தம் ஓர் அறிமுகம் அறிஞர் மயிலை. சீனி வெங்கடசாமி கடற்காவல் தெய்வம் மணிமேகலை சிலப்பதிகாரக் கதைத்தலைவனாகிய கோவலன் என்னும் வணிகன் மகளுக்கு மணிமேகலை என்பது பெயர். இந்த மணிமேகலையைப் பற்றித் 'தமிழ் நாட்டுப் பௌத்தப் பெரியார்' என்னும் அதிகாரத்தில் கூறியிருக்கின்றோம். இந்த மணிமேகலையைக் கதைத்தலைவியாகக் கொண்டு, அவளது வரலாற்றினைக் கூறும் சீத்தலைச்சாத்தனாரியற்றிய காப்பியத்துக்கும் 'மணிமேகலை' என்பது பெயர். இந்த நூலினைப்பற்றித் 'தமிழ்ப்பௌத்த நூல்கள்' என்னும் அதிகாரத்தில் கூறியிருக்கின்றோம். * இங்கு 'மணிமேகலை' என்னும் கடல் தெய்வத்தைப் பற்றி… Continue reading கடற்காவல் தெய்வம் மணிமேகலை!