அரசியல், இந்தியா

சச்சின்,ரேகா நாடாளுமன்றத்தின் பக்கமே வருவதில்லை: எம்பிக்கள் குற்றச்சாட்டு

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகை ரேகா காங்கிரஸ் சார்பாக மாநிலங்களவை எம்.பி.க்களாக கடந்த 2012 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் எம்பிக்களாக  தேர்வு செய்யப்பட்ட பின்னர் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்வது அரிதாக உள்ளதாக சக எம்.பி.க்கள் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து சிபிஐ  எம்பி ராஜீவ் மாநிலங்களைவில் கூறுகையில், ஒரு எம்பி 60 நாட்கள் அவைக்கு வராமல் ஆப்சென்ட் ஆனால் அந்த எம்பிக்கான இடம் மாநிலங்களவையில் காலியாகவுள்ளதாக அறிவிக்க வேண்டும் என்றார்.… Continue reading சச்சின்,ரேகா நாடாளுமன்றத்தின் பக்கமே வருவதில்லை: எம்பிக்கள் குற்றச்சாட்டு

அரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள்

மீனவர் பிரச்னை, விலைவாசி உயர்வு குறித்து பேச அனுமதி : சுமித்ரா மகாஜனிடம் வேண்டுகோள்

மக்களவையில் வரும் 8 ஆம் தேதி ரயில்வே பட்ஜெட்டையும், வரும் 10 தேதி , பொது பட்ஜெட்டையும் தாக்கல் செய்ய உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்படவுள்ளன. இந்நிலையில்  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரைச் சுமுகமாக நடத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் இன்று கூட்டினார். இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு , காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, லோக் ஜனசக்தித் தலைவர் ராம்விலாஸ்… Continue reading மீனவர் பிரச்னை, விலைவாசி உயர்வு குறித்து பேச அனுமதி : சுமித்ரா மகாஜனிடம் வேண்டுகோள்

அரசியல், அரசியல் பேசுவோம், பெண், பெண் அரசியல்வாதிகள்

மக்களவையின் புதிய சபாநாயகராக சுமித்ரா மகாஜன் பதவியேற்பு

பதினாறாவது மக்களவையின் புதிய சபாநாயகராக சுமித்ரா மகாஜன் தேர்வாகியுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருக்கும் சுமித்ரா, மத்திய பிரதேச மாநிலத்தின் இண்டூர் தொகுதியின் மக்களவை உறுப்பினராக 8 முறை தேர்வானவர். சுமித்ரா மகாஜன் சட்டம் படித்தவர். மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படும் இரண்டாவது பெண் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் என்பது குறிப்பிடத்தகுந்தது.