சுற்றுச்சூழல்

கழுத்தறுக்கும் சீனாவின் மாஞ்சா!

ஞா. கலையரசி இந்தியா முழுமையும் பொங்கல், சங்கராந்தி, குடியரசு தினம் போன்ற நாட்களில் பட்டம் விடுவது பாரம்பரியமான விளையாட்டு.  சிறுவர் முதல் பெரியவர் வரை வித விதமான உருவங்களில் வண்ணமயமான  பட்டங்களை வானில் பறக்கவிட்டு, ரசித்து மகிழ்ந்த காலம் மலையேறி, இன்றைக்குப் பட்டம் பறக்க விடுதல் என்பது, மற்றவரின் பட்டத்தை அறுத்து விடுதல் என்ற சண்டையாக மாறியிருக்கிறது.  மற்றவரின் துன்பத்தில், இன்பங் காணும் மனநிலை பெருகியிருக்கிறது! மற்றவர்களின் பட்டத்தைப் பாதியில் அறுத்து விட்டுத் தன்னுடையதை மட்டும், உயரே… Continue reading கழுத்தறுக்கும் சீனாவின் மாஞ்சா!

Advertisements
அரசியல், தமிழ்நாடு

இனி அரசு மருத்துவமனைகளிலும் அம்மா உணவகங்கள்!

சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் வார்டுக்கு ஒன்று என 200 அம்மா உணவகங்கள் உள்ளன. மேலும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, எழும்பூர் தாய்-சேய் நல மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளிலும் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களில் மலிவு விலையில் இட்லி, பொங்கல், சப்பாத்தி, சாம்பார் சாதம், தயிர் சாதம் உள்ளிட்ட உணவுகள் விற்கப்படுகின்றன. இந்த நிலையில்,திருவல்லிக்கேணி அரசு கஸ்தூர்பா காந்தி தாய் -சேய் நல மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள அம்மா… Continue reading இனி அரசு மருத்துவமனைகளிலும் அம்மா உணவகங்கள்!

சமையல், சிறப்பு கட்டுரைகள், சிறு தொழில், சிறுதானியங்கள், சுயதொழில், பெண், பெண் தொழில் முனைவு, பெண்களுக்கான வேலைவாய்ப்பு, மருத்துவம்

சிறுதானிய உணவகம் நடத்தும் எம்பிஏ பட்டதாரி!

சிறுதானியங்கள் உண்பதால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச் சத்துகளும் கிடைக்கும்’, ‘நீரிழிவு பிரச்னைக்கான வாய்ப்பைக் குறைக்கலாம்’, ‘கொழுப்புச் சத்தைக் குறைக்கலாம்’, ‘மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கலாம்’, ‘கேன்சர் நோய் வராமல் தடுக்க முடியும்’ எப்படி? தானியங்களை சுழற்சி முறையில் உட்கொள்வதால்! சிறுதானியங்களின் மகத்துவத்தை உணர்த்தும் அர்த்தம் பொதிந்த இந்த வாசகங்களை வெறுமனே அறிவுரையாக மட்டும் சொல்லிவிடாமல் நடைமுறைப்படுத்தி, நிரூபித்தும் வருகிறார் லட்சுமி. உடுமலைப் பேட்டையில் ‘ஆரோக்யம் – இயற்கை மற்றும் பாரம்பரிய உணவகம்’ என்கிற சிறுதானிய உணவு… Continue reading சிறுதானிய உணவகம் நடத்தும் எம்பிஏ பட்டதாரி!

உறுப்பு தானம், சினிமா

கல்லூரி மாணவர்களுடன் நமீதா கொண்டாடிய சிறப்பு பொங்கல்!

சென்னை கேளம்பாக்கத்தில் பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள SMK Fomra Institute of Technology இல் பொறியியல் மாணவ மாணவியரும் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தார் நமீதா. காலை 10 மணிமுதல் மதியம் 3 மணி வரை மாணவ மாணவியருடன் அமர்ந்து பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி ஆர்த்தி தொகுத்து வழங்கிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தார். மாணவ மாணவியரின் சுற்றுப்புறச்சூழல் குறித்த பட்டிமன்றம், மாணவியரின் நடன நிகழ்ச்சிகள் ஆகியவற்றை மிகவும் ரசித்துப்பார்த்த நமீதா மேடையில் ஏறி அவர்களுடன்… Continue reading கல்லூரி மாணவர்களுடன் நமீதா கொண்டாடிய சிறப்பு பொங்கல்!