அறிஞர் மயிலை. சீனி வெங்கடசாமி, ஆன்மீகம், புத்தம் : ஓர் அறிமுகம், புத்தம்: ஓர் எளிய அறிமுகம்!, பௌத்த மதம், பௌத்த மதம் தமிழ்நாடு வந்த வரலாறு, பௌத்தம், பௌத்தம் தமிழ் நாட்டில் வளர்ச்சிபெற்ற வரலாறு!

அகத்தியர் தமிழகத்தில் வாழ்ந்தவரா?

புத்தம் ஓர் அறிமுகம் அறிஞர் மயிலை. சீனி வெங்கடசாமி (அறிஞர் மயிலை. சீனி வெங்கடசாமி எழுதிய பெளத்தமும் தமிழும் நூலின் கட்டுரைகளை பகுதி கட்டுரைகளாக பிரசுரித்து வருகிறோம். இந்த நூலின் பின் இணைப்புகளை கடந்த மூன்று பகுதிகளில் பார்த்தோம் அதன் தொடர்ச்சி...) அகத்தியர்         ' விடையுகைத்தவன் பாணினிக்கு இலக்கணம் மேனாள்          வடமொழிக்குரைத் தாங்கு இயன்மலயமா முனிக்குத்          திடமுறுத்தியம் மொழிக்கு எதிராக்கிய தென்சொல்          மடமகட்கு அரங்கென்பது வழுதிநாடன்றோ? '                                    - திருவிளையாடற்புராணம்.… Continue reading அகத்தியர் தமிழகத்தில் வாழ்ந்தவரா?

அரசியல், அறிஞர் மயிலை. சீனி வெங்கடசாமி, ஆன்மீகம், புத்தம் : ஓர் அறிமுகம், புத்தம்: ஓர் எளிய அறிமுகம்!, பௌத்த மதம், பௌத்தம், மயிலை சீனி. வெங்கடசாமி

மாட்டுத் தொழுவத்தில் பிறந்த மக்கலி உண்டாக்கிய ஆசிவக மதம்!

புத்தம் : ஓர் அறிமுகம் அறிஞர் மயிலை சீனி. வெங்கடசாமி ஆசீவக மதம் பௌத்த, ஜைன, வைதீக மதங்களைப் போலவே, இந்த ஆசீவக மதமும் வட இந்தியாவில் தோன்றியது. இந்த மதத்தை உண்டாக்கினவர் மஸ்கரிபுத்திரர் என்பவர். பாளிமொழியில் இப்பெயர் மக்கலிபுத்த என்று வழங்கப்படுகின்றது. மாட்டுத் தொழுவம் என்று பொருள்படும் 'கோசால' என்னும் அடைமொழி கொடுத்துக் கோசால மக்கலிபுத்த என்றும் இவர் வழங்கப்படுவர். ஏனென்றால், இவர் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார் என்று சொல்லப்படுகின்றது. தமிழ் நூல்கள் இவரை மற்கலி… Continue reading மாட்டுத் தொழுவத்தில் பிறந்த மக்கலி உண்டாக்கிய ஆசிவக மதம்!

அறிஞர் மயிலை. சீனி வெங்கடசாமி, ஆன்மீகம், புத்தம் : ஓர் அறிமுகம், புத்தம்: ஓர் எளிய அறிமுகம்!, பௌத்த மதம் தமிழ்நாடு வந்த வரலாறு, பௌத்தம், பௌத்தம் தமிழ் நாட்டில் வளர்ச்சிபெற்ற வரலாறு!, மயிலை சீனி. வெங்கடசாமி

பெளத்தம் தமிழுக்குத் தந்த பாளிமொழிச் சொற்கள்!

புத்தம் : ஓர் அறிமுகம் அறிஞர் மயிலை சீனி. வெங்கடசாமி தமிழில் பாளிமொழிச் சொற்கள் வாணிகம், மதம், அரசாட்சி முதலிய தொடர்புகளினாலே ஒரு தேசத்தாரோடு இன்னொரு தேசத்தார் கலந்து உறவாடும்போது அந்தந்தத் தேசத்து மொழிகளில் அயல்நாட்டுச் சொற்கள் கலந்துவிடுவது இயற்கை. வழக்காற்றிலுள்ள எல்லா மொழிகளிலும் வெவ்வேறு பாஷைச் சொற்கள் கலந்திருப்பதைக் காணலாம். இந்த இயற்கைப்படியே தமிழிலும் வெவ்வேறு மொழிச் சொற்கள் சில கலந்து வழங்குகின்றன. இவ்வாறு கலந்து வழங்கும் வேறுமொழிச் சொற்களைத் திசைச்சொற்கள் என்பர் இலக்கண ஆசிரியர்.… Continue reading பெளத்தம் தமிழுக்குத் தந்த பாளிமொழிச் சொற்கள்!

அறிஞர் மயிலை. சீனி வெங்கடசாமி, புத்தம் : ஓர் அறிமுகம், புத்தம்: ஓர் எளிய அறிமுகம்!, மயிலை சீனி. வெங்கடசாமி

குண்டலகேசி அழிந்த வரலாறு!

புத்தம் : ஓர் அறிமுகம் அறிஞர் மயிலை சீனி. வெங்கடசாமி பௌத்தர் இயற்றிய தமிழ் நூல்கள் - குண்டலகேசி ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாகிய இந்த நூல் இப்போது இறந்துபட்டது. 'தருக்கமாவன : ஏகாந்த வாதமும் அனேகாந்த வாதமும் என்பன. அவை குண்டலம், நீலம், பிங்கலம், அஞ்சனம், தத்துவதரிசனம், காலகேசி முதலிய செய்யுட்களுள்ளும் சாங்கிய முதலிய ஆறு தரிசனங்களுள்ளும் காண்க' என்று யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர் 'மாலை மாற்றே சக்கரம் சுழிகுளம்' என்னும் சூத்திர உரையில் கூறியிருப்பதனால், குண்டலகேசி தருக்கநூல் என்பது அறியப்படும்.… Continue reading குண்டலகேசி அழிந்த வரலாறு!

அறிஞர் மயிலை. சீனி வெங்கடசாமி, ஆன்மீகம், புத்தம் : ஓர் அறிமுகம், புத்தம்: ஓர் எளிய அறிமுகம்!, மயிலை சீனி. வெங்கடசாமி

பெளத்தர் இயற்றிய இலக்கண நூல்!

அறிஞர் மயிலை சீனி. வெங்கடசாமி பௌத்தர் இயற்றிய தமிழ் நூல்கள் வீரசோழியம் இஃதோர் இலக்கண நூல். வடமொழி இலக்கணத்தைச் சிறுபான்மை தழுவித் தமிழ் ஐந்திலக்கணங்களையும் சுருக்கமாகக் கூறுவது. இதனை இயற்றியவர் புத்தமித்திரனார். இந்நூற்கு உரை எழுதியவர் இவரது மாணவராகிய பெருந்தேவனார். புத்தமித்திரனாரை ஆதரித்த வீரராசேந்திரன் என்னும் வீரசோழன் பெயரால் இந்நூல் இயற்றப்பட்டதாகலின், இதற்கு இப்பெயர் வாய்ந்தது. இதனை 'எதிர் நூல்' என்பர். இதற்கு 'வீரசோழியக் காரிகை' என்னும் பெயரும் உண்டு. எழுத்ததிகாரம், சந்திப்படலம் என்னும் ஒரே படலத்தையுடையதாய் 28-செய்யுள்களையுடையது.… Continue reading பெளத்தர் இயற்றிய இலக்கண நூல்!