அறிஞர் மயிலை. சீனி வெங்கடசாமி, ஆய்வு, சமணமும் தமிழும்

சமணசமயம் தமிழ்நாட்டில் ஏன் செல்வாக்கடைந்தது?

சமணசமயம் சிறப்படைந்த வரலாறு சமணமும் தமிழும் – 7 அறிஞர் சீனி. வெங்கடசாமி பண்டைக் காலத்திலே சமணசமயம் தமிழ்நாடு முழுவதும் பரவி நிலைபெற்றிருந்தது. பரவியிருந்ததுமட்டுமல்லாமல் செல்வாக்குப் பெற்றும் இருந்தது. இந்தச் சமயம் தமிழ் நாட்டிலே வேரூன்றி தழைத்துக் தளிர்த்து இருந்ததைத் தேவராம், நாலாயிரப் பிரபந்தம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலிய பிற்காலத்து நூல்களும், மணிமேகலை, சிலப்பதிகாரம் முதலிய சங்ககாலத்து நூல்களும் தெரிவிக்கின்றன. இலக்கியச் சான்று மட்டுமல்லாமல், சாசனங்களும் அழிந்தும் அழியாமலும் காணப்படுகிற சமணக் கோயில்களும் காடுமேடுகளில்… Continue reading சமணசமயம் தமிழ்நாட்டில் ஏன் செல்வாக்கடைந்தது?

அறிஞர் மயிலை. சீனி வெங்கடசாமி, ஆய்வு, சமணமும் தமிழும்

சமணரின் இல்லற ஒழுக்கம்!

சமணமும் தமிழும் : பகுதி-5 அறிஞர் மயிலை.சீனி வெங்கடசாமி ஆருகதரின் இல்லற ஒழுக்கம் ‘‘பாங்கமை செல்வராகிப் பகுத்துண்டு வாழ்தல் ஒன்றே     தாங்கிய தவத்தின் மிக்க தவநிலை நிற்றல் ஒன்றே’’ என்று திருத்தக்கதேவர் தாம் அருளிய நரிவிருத்தத்தில் கூறியதுபோல, சமணசமயத்தில் இல்லறம் துறவறம் என இரண்டு அறங்கள் மட்டும் கூறப்படுகின்றன. சமணர்கள் இவ்வறங்களில் ஏதேனும் ஒன்றை மேற்கொள்ள வேண்டும். சமணரின் துறவற ஒழுக்கத்தை மேலே யதிதர்மம் என்னும் அதிகாரத்தினால் கூறினோம். ஈண்டுச் சாவகர் (சிராவகர்) எனப்படும் இல்லறத்தார்… Continue reading சமணரின் இல்லற ஒழுக்கம்!

அனுபவம், அரசியல், அறிஞர் மயிலை. சீனி வெங்கடசாமி, ஆன்மீகம், புத்தம் : ஓர் அறிமுகம், புத்தம்: ஓர் எளிய அறிமுகம்!, பௌத்த மதம், பௌத்த மதம் தமிழ்நாடு வந்த வரலாறு, பௌத்தம், பௌத்தம் தமிழ் நாட்டில் வளர்ச்சிபெற்ற வரலாறு!, மகேந்திரர், மயிலை சீனி. வெங்கடசாமி

தமிழ்நாட்டிலிருந்து சீனாவுக்குச் சென்று பௌத்தம் போதித்தவர்கள்!

புத்தம் ஓர் அறிமுகம் மயிலை சீனி. வெங்கடசாமி தமிழகத்தில் பெளத்தத்தை வளர்த்த பெரியோர்கள் பற்றிப் பார்த்துவருகிறோம். அதன் தொடர்ச்சியாக இந்தப் பதிவில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பெளத்த பெரியோர்கள் இடம்பெறுகிறார்கள். 12. புத்த நந்தி, சாரி புத்தர் இவ்விருவரும் சோழ நாட்டில் போதி மங்கை என்னும் ஊரில் இருந்தவர். சைவ சமய ஆசாரியராகிய திருஞான சம்பந்தர் இந்த ஊர் வழியாகச் சங்கு, தாரை முதலான விருதுகளை ஊதி ஆரவாரம் செய்துகொண்டு வந்தபோது, பௌத்தர்கள் அவரைத் தடுத்து, வாதில் வென்ற… Continue reading தமிழ்நாட்டிலிருந்து சீனாவுக்குச் சென்று பௌத்தம் போதித்தவர்கள்!