எழுத்தாளர்கள், நூல் அறிமுகம்

நூல் அறிமுகம்: ஆதவன் தீட்சண்யாவின் ‘மீசை என்பது வெறும் மயிர்’ !

நூல் அறிமுகம் ஒரு புனைவு உங்களுக்கு சமூகத்தின் பல்வேறு இடர்பாடுகளை அழுத்தங்களை அடக்குமுறைகளை  இனம் காட்டுகிறதென்றால் அது புனைவு என்கிற வரையறைத் தாண்டி வேறொன்றை அடைகிறது. . ஆதவன் தீட்சண்யாவின் ‘மீசை என்பது வெறும் மயிர்’ நாவல் சீர்திருத்த எழுத்து! 19ம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டங்களில் இந்திய சமூகத்தில் வேறோடிப் போயிருக்கும் சாதிய ஒடுக்குமுறைகள் குறித்து, கட்டுக்கதைகளை உடைக்கும் வகையில் விமர்சனப் போக்கில் மகாத்மா புலே எழுதியிருப்பார். அந்த நேரத்தில் சாதி ஒடுக்குமுறைகளை குறித்து ஆட்சியாளர்களுக்கு அறிவிக்கும்பொருட்டும்… Continue reading நூல் அறிமுகம்: ஆதவன் தீட்சண்யாவின் ‘மீசை என்பது வெறும் மயிர்’ !

அரசியல், சர்ச்சை, தமிழ்நாடு

ராஜேந்திர சோழன் அரியணை ஏறிய 1000 ஆவது ஆண்டு விழா: ஒரு பார்வை

ஸ்ரீரசா இன்றுவரை தமிழ் நிலத்தில் பார்ப்பனீயத்தின் அதிகாரத்தை, சாதியத்தின் அதிகாரத்தை நிலை நிறுத்தியதில் சோழர்களின் பங்கே அளப்பரியது. ராஜராஜனும், அவன் மகன் ராஜேந்திரனும் தம் அளப்பரிய அதிகார வலிமையின் துணையோடு, ஆண்ட பரம்பரையாக இருந்தாலும் பார்ப்பனியக் கருத்தியலின் அடிமைப் பரம்பரையாகவும் இருந்தனர். அதன் விளைவாக, பார்ப்பனியத்தை மண்ணில் நிலைநிறுத்தும் வகையில் நல்ல வளமான லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களைப் பிரம்மதேயம் என்று அவர்களுக்குப் பட்டாப் போட்டுக் கொடுத்தனர். கல்முதலாளி என்று பெரியார் வர்ணிப்பதைப்போல, கோயில்கள் பெயரில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்… Continue reading ராஜேந்திர சோழன் அரியணை ஏறிய 1000 ஆவது ஆண்டு விழா: ஒரு பார்வை

பெண்கல்வி, பெண்கள் பத்திரிகை, பெண்ணியம்

முதல் பெண் பட்டதாரியின் கதையை எழுதுங்கள்!

பெண்கல்வியின் முக்கியத்துவத்தை நாம் உணர ஆரம்பித்ததே பிரிட்டீஷாரின் வருகைப் பிறகுதான். சுதந்திரப் போராட்டத்தில் பெண்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு ராஜாராம் மோகன்ராய், ஈஸ்வர சந்திர வித்யாசாகர் போன்றோர் மக்களிடையே அதை முன்னெடுத்துச் சென்றனர். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட பெண்களின் கல்வி உரிமைக்காக மகாத்மா ஜோதிபாய் புலே, பெரியார் குரல் கொடுத்தனர். சுதந்திரம் கிடைத்து 30 ஆண்டுகளுக்குப் பிறகே, பெண்கள் கல்விச்சாலைகளுக்கு வர முடிந்தது. 21ம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் பெண்கல்வியின் சராசரி அளவு 50 சதவிகிதத்தை எட்ட முடிந்திருக்கிறது. இன்னும்… Continue reading முதல் பெண் பட்டதாரியின் கதையை எழுதுங்கள்!