பெண், பெண்ணியம்

இந்து பெண்களுக்கு நீதி மறுக்கும் பாஜக, முஸ்லிம் பெண்களுக்கு நீதி பெற்றுத் தந்துவிடுமா?

பிருந்தா காரத் முஸ்லிம் பெண்கள் தங்கள் சொந்த அனுபவங்களின் அடிப்படையில் தலாக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆகவே அதனை ஆதரிப்பதில் எந்த வித கேள்வியும் இல்லை. பெரும்பாலான முஸ்லிம் நாடுகளிலேயே இந்த தலாக் முறை இல்லை. மேலும் இந்நாடுகள் இது மதநம்பிக்கையின்பாற்பட்டதல்ல, ஆண் ஆதிக்கம் என்பதை ஒப்புக் கொண்டுள்ளன. பாலின நீதி குறித்து பாஜக-வின் சில பிரசங்கங்களையும், கருத்துகளையும் கண்டு ஆச்சரியமடைந்தேன். ஸ்யாமா பிரசாத் முகர்ஜி என்பவர்தான் பாஜக-வின் அரசியல் ஆதர்சம். இவர் இந்து சட்ட சீர்த்திருத்தங்களை… Continue reading இந்து பெண்களுக்கு நீதி மறுக்கும் பாஜக, முஸ்லிம் பெண்களுக்கு நீதி பெற்றுத் தந்துவிடுமா?

பெண், பெண்கள் பாதுகாப்பு, பெண்ணியம்

“அடிடா அவளை, வெட்றா அவளை”!

அமுதா சுரேஷ் ஒருதலையாகக் காதலித்து, பெண்ணின் மறுப்பைத் தாங்க முடியா "தி சோ கால்ட் ஆண்களின்" வன்முறைகளை யோசித்துப் பார்க்கும் போது, பெண் பார்க்கிறேன் பேர்வழி என்று, பஜ்ஜி சொஜ்ஜி சகிதம் பட்டாளத்துடன் போய், பெண் நெட்டை, குட்டை, மூக்கு சரியில்லை, முழி சரியில்லை என்று பெண்களை விமர்சித்து, அக்கா வேண்டாம் தங்கையைக் கொடுங்கள் என்று கூச்சமில்லாமல் பேசும் ஆண்களை எல்லாம் சம்பந்தப்பட்ட பெண்கள் இதுவரை ஏன் வெட்டவில்லை என்ற கேள்வி எழுகிறது பர்முடாஸ் என்ற பெயரில்… Continue reading “அடிடா அவளை, வெட்றா அவளை”!

இதழ், பெண், பெண்கல்வி, பெண்களுக்கான வேலைவாய்ப்பு, பெண்கள் பாதுகாப்பு, பெண்ணியம்

பணியிடத்தில் சமத்துவம் – உரையாடலின் துவக்கம்

மேலே இருக்கும் கார்ட்டூன் பிரிட்டன் நோபல் அறிவியலாளர் டிம் ஹண்ட்டின் கருத்தை ஒட்டி இண்டிபெண்டண்ட் இதழ் வெளியிட்டது. ஆண்களும் பெண்களுமாக சேர்ந்து பணியாற்றத் தொடங்கியிருக்கும் காலகட்டம் இது. 2000ன் ஆரம்பங்களில்கூட இந்தியாவில் பத்திரிகை துறை உள்பட பல துறைகளில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருந்தார்கள். புலனாய்வுப் பத்திரிகைகள் ‘பாதுகாப்பு’ காரணங்களுக்காக பெண் நிருபர்களை பணியமர்த்த மறுத்தன. இன்றும்கூட தமிழக புலனாய்வுப் பத்திர்கைகளில் ஒரு பெண் நிருபர்கூட இல்லை. இதே பாதுகாப்பை காரணம் காட்டி இராணுவத்தில் பிரச்னைக்குரிய பகுதிகளில்… Continue reading பணியிடத்தில் சமத்துவம் – உரையாடலின் துவக்கம்

இன்றைய முதன்மை செய்திகள், பெண், பெண்கல்வி, பெண்கள் பாதுகாப்பு

ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனி பணிக்கூடம்: நோபல் பரிசு பெற்ற அறிஞரின் பரிந்துரை!

'பெண்களுடன் பணிபுரிவதில் மூன்று சிக்கல் இருப்பதாக தெரிவித்தார். ஒன்று அவர்களுடன் நீங்கள் காதல் வயப்படுவீர்கள், இரண்டு அவர்கள் உங்களுடன் காதல் வயப்படுவார்கள். மூன்று நீங்கள் அவர்களுடைய பணித் திறமை மீது விமர்சனம் செய்தால் அவர்கள் அழுவார்கள். அதனால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி பணிக்கூடத்தை அமைக்க பரிந்துரைக்கிறேன்' அறிவியல் படித்தவர்கள் ஆண்-பெண் சமத்துவத்தை உணர்ந்தவர்கள் என்கிற நம்பிக்கை இருந்தால் அதை மாற்றிக் கொள்ளுங்கள். மடாதிபதிகளைப் போலவும் காலம்காலமாக ஆணாதிக்கத்தில் ஊறிய ஆணைப் போலவும் சிந்தனை கொண்டவர்கள் அறிவியலாளர்களாகவும் நோபல்… Continue reading ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனி பணிக்கூடம்: நோபல் பரிசு பெற்ற அறிஞரின் பரிந்துரை!

அரசியல், இதழ், சினிமா, பெண், பெண்கள் பத்திரிகை, பெண்ணியம்

4 பெண்கள் இனி மாதமிருமுறை இதழாக…

வழமையாக பெண்களுக்கான இதழ்களில் ஏற்பட்ட நம்பிக்கையின்மையின் காரணமாகவே 4 பெண்கள் தளம் தொடங்கப்பட்டது. ஆர்வத்தின் காரணமாக அவசர அவசரமாக சரியான நிலைப்பாட்டில் 4 பெண்கள் தளம் இதுநாள் வரை செயல்படவில்லை என்பதை இங்கே ஒத்துக் கொள்கிறோம். நமக்கு எது வேண்டும், எது வேண்டாம் என்கிற புரிதலுக்கு வர சிறிது காலம் தேவைப்பட்டது, இந்தக் காலக்கட்டத்தில் வெகுஜென பெண்கள் இதழ்களுக்கும் தீவிர பெண்ணியத்திற்கும் இடையேயான இடைவெளி குறித்து நிறைய தெரிந்துகொள்ள முடிந்தது. இந்த இடைவெளி பற்றி நாம் அதிகம் விவாதிக்காததும் இந்த இடைவெளியை நீக்க எத்தகைய இணைப்பு நடவடிக்கை தேவை என்பதையும் சிந்திக்க முடிந்தது.… Continue reading 4 பெண்கள் இனி மாதமிருமுறை இதழாக…