அரசியல், இந்தியா, தமிழ்நாடு

சிறையிலிருந்து இன்று விடுதலையாகிறார் ஜெயலலிதா

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சிறையிலிருந்து இன்று விடுதலையாவார் என அவரது வழக்கறிஞர் குமார் தெரிவித்துள்ளார்.  சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கிய நிலையில், அதற்கான நகல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதாக அவர் கூறினார். அதனால் ஜெயலலிதாவை உடனடியாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை செய்ய இயலவில்லை என வழக்கறிஞர் குமார் தெரிவித்தார். உச்சநீதிமன்றத்தின் நகல் மூலம் ஜெயலலிதாவை, சிறையில் இருந்து விடுவிப்பதற்காக, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தை அணுகவுள்ளதாக தெரிவித்தார். அதற்கான நடவடிக்கைகள் முடிந்து அவர் இன்று… Continue reading சிறையிலிருந்து இன்று விடுதலையாகிறார் ஜெயலலிதா

அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், தமிழ்நாடு

ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை: கருணாநிதி கருத்து கூற மறுப்பு

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து தீர்ப்பளித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கருத்துத் தெரிவித்தனர். கருணாநிதி: கருத்துத் தெரிவிக்க மறுத்து விட்டார். விஜயகாந்த்: 18 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கு ஒருவழியாக முடிவுக்கு வந்து பதவியில் இருக்கும்போதே முதல்வர் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மிகப் பெரிய பதவியில் இருந்தாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும்… Continue reading ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை: கருணாநிதி கருத்து கூற மறுப்பு

அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், தமிழ்நாடு

ஜெயலலிதவுக்கு 4 ஆண்டுகள் சிறை, ரூ. 100 கோடி அபராதம்

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்பட 4 பேரும் குற்றவாளிகள் என பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தண்டனை விவரம் 3 மணிக்கு தெரியவரும் என தகவல் வெளியாகியுள்ளது. 1991 முதல் 1996 வரை முதலமைச்சராக பதவி வகித்தபோது, ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 1996-ம் ஆண்டு சுப்ரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அப்போது தொடங்கி சுமார் 18 ஆண்டுகள் வரை இந்த வழக்கு சென்னை மற்றும் பெங்களூருவில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களில் நடைபெற்றது.… Continue reading ஜெயலலிதவுக்கு 4 ஆண்டுகள் சிறை, ரூ. 100 கோடி அபராதம்