அறிஞர் மயிலை. சீனி வெங்கடசாமி, ஆன்மீகம், புத்தம் : ஓர் அறிமுகம், புத்தம்: ஓர் எளிய அறிமுகம்!, பௌத்த மதம் தமிழ்நாடு வந்த வரலாறு, பௌத்தம், பௌத்தம் தமிழ் நாட்டில் வளர்ச்சிபெற்ற வரலாறு!, மயிலை சீனி. வெங்கடசாமி

பெளத்தம் தமிழுக்குத் தந்த பாளிமொழிச் சொற்கள்!

புத்தம் : ஓர் அறிமுகம் அறிஞர் மயிலை சீனி. வெங்கடசாமி தமிழில் பாளிமொழிச் சொற்கள் வாணிகம், மதம், அரசாட்சி முதலிய தொடர்புகளினாலே ஒரு தேசத்தாரோடு இன்னொரு தேசத்தார் கலந்து உறவாடும்போது அந்தந்தத் தேசத்து மொழிகளில் அயல்நாட்டுச் சொற்கள் கலந்துவிடுவது இயற்கை. வழக்காற்றிலுள்ள எல்லா மொழிகளிலும் வெவ்வேறு பாஷைச் சொற்கள் கலந்திருப்பதைக் காணலாம். இந்த இயற்கைப்படியே தமிழிலும் வெவ்வேறு மொழிச் சொற்கள் சில கலந்து வழங்குகின்றன. இவ்வாறு கலந்து வழங்கும் வேறுமொழிச் சொற்களைத் திசைச்சொற்கள் என்பர் இலக்கண ஆசிரியர்.… Continue reading பெளத்தம் தமிழுக்குத் தந்த பாளிமொழிச் சொற்கள்!

அறிஞர் மயிலை. சீனி வெங்கடசாமி, ஆன்மீகம், புத்தம் : ஓர் அறிமுகம், புத்தம்: ஓர் எளிய அறிமுகம்!, பௌத்த மதம், பௌத்தம், மயிலை சீனி. வெங்கடசாமி

போதி தருமரின் உண்மையான வரலாறு!

புத்தம் ஓர் அறிமுகம் மயிலை சீனி. வெங்கடசாமி தமிழகத்தில் வாழ்ந்த பெளத்தப் பெரியவர்கள் பற்றி பார்த்து வருகிறோம். 6. நாதகுத்தனார் இப்பெயர் நாதகுப்தனார் என்பதன் திரிபு போலும். இவர் குண்டலகேசி என்னும் காப்பியத்தைத் தமிழில் இயற்றியவர். இவர் இந்தக் காவியத்தின் ஆசிரியர் என்பது, நீலகேசி (மொக்கல வாதச் சருக்கம் 78 -ஆம் பாட்டின்) உரையில், புழுக்குலந் தம்மால் நுகரவும் வாழவும் பட்டவினைய வுடம்பு என்னும் அடியை மேற்கோள் காட்டி, இதனை நாதகுத்தனார் வாக்கு என்று குறிப்பிட்டிருப்பதிலிருந்தும் அறியப்படும்.… Continue reading போதி தருமரின் உண்மையான வரலாறு!

ஆன்மீகம், புத்தம் : ஓர் அறிமுகம், புத்தம்: ஓர் எளிய அறிமுகம்!, மயிலை சீனி. வெங்கடசாமி

பௌத்தக் கோயில்களை அழித்து கட்டப்பட்ட வைணவ, கிறித்துவ கோயில்கள்: வரலாற்று சான்றுகள்

புத்தம் ஓர் அறிமுகம்  மயிலை சீனி.வெங்கடசாமி பூதமங்கலம் இதுவும் சோழநாட்டில் இருந்த பௌத்த ஊர்களில் ஒன்று. இவ்வூரில், பிண்டிதாசர் என்றும், வேணுதாசர் என்றும் பெயருள்ள ஒருவரால் அமைக்கப்பட்ட பௌத்தப் பள்ளி ஒன்றிருந்ததென்றும், அப்பள்ளியில் சில காலம் தங்கியிருந்தபோது ஆசாரியர் புத்ததத்த தேரர் 'வினய வினிச்சயம்' என்னும் பாளி மொழி நூலை இயற்றினார் என்றும் தெரிகின்றது.  போதிமங்கை இதுவும் சோழநாட்டில் இருந்தது. 'சாக்கியர்தம் போதிமங்கை' என்று இதனைப் பெரிய புராணம் கூறுகின்றது. (சாக்கியர்=பௌத்தர்.) இப்பெயரைக்கொண்டே இது பௌத்தர்களுக்குரியது என்பதை நன்கறியலாம்.… Continue reading பௌத்தக் கோயில்களை அழித்து கட்டப்பட்ட வைணவ, கிறித்துவ கோயில்கள்: வரலாற்று சான்றுகள்