இசை வெளியீடு, இசையமைப்பாளர், சினிமா

கோலிவுட் பிரபலங்கள் திரண்டுவந்த அமரகாவியம் இசை வெளியீடு: படங்கள்

நடிகர் ஆர்யா தயாரிக்கும் முதல் படம் அமரகாவியம். இதில் ஆர்யாவின் தம்பி சத்யா கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக மியா ஜார்ஜ் நடிக்கிறார். ஜீவா சங்கர் இயக்கும் இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். படத்தின் இசை வெளியீடு இன்று நடந்தது. இசைவெளியீட்டு கோலிவுட் பிரபலங்கள் பலர் வந்திருந்தனர். நயந்தாரா, த்ரிஷா, பூஜா,விக்ராந்த்,ஸ்ரீகாந்த், சாந்தனு,விஷ்ணு,ராஜூ முருகன்,விஷ்ணுவர்த்தன், உதயநிதி ஸ்டாலின்,பார்த்திபன் வந்திருந்தவர்களில் சிலர்.  

சினிமா

தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன சுவாமி ரா ரா தமிழுக்கு வருகிறது!

நெஞ்சைப் பிழியும் காட்சிகள் இல்லாமல் ரத்தம் சொட்டும் வன்முறை இல்லாமல் பதைபதைக்கும் பயமுறுத்தல் இல்லாமல் ஒரு படம் உருவாகிறது ’சாமியாட்டம்’. இலகுவான கதை, மிருதுவான காட்சிகள் வேடிக்கையான சம்பவங்கள், கேலி, கிண்டல் என ஜாலி பேச்சுகள், விறுவிறுப்பான திரைக்கதை என ஜாலி வேடிக்கை வினோதப் படமாக ‘ சாமியாட்டம்’ உருவாகிறது. நடிகர் ஸ்ரீகாந்தின் சொந்தப் பட நிறுவனமான் கோல்டன் ப்ரைடே பிலிம் இப்படத்தை தயாரிக்கிறது. ஏற்கனவே இந்நிறுவனம் தயாரித்து வெளியிடும் நிலையில் ’நம்பியார்’ படம் இருக்கிறது. இது… Continue reading தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன சுவாமி ரா ரா தமிழுக்கு வருகிறது!

சினிமா, பெண் இயக்குநர்

மாற்று சினிமா முயற்சியில் ஆந்திரா மெஸ்!

பாலிவுட்டில் விளம்பரப் பட இயக்குநர்கள் சினிமா இயக்க வருவது புதிய டிரெண்டாக இருக்கிறது. அந்தப் பாணியில் ஆந்திரா மெஸ் படத்தை இயக்க வந்திருக்கிறார் ஜெய். விளம்பரப் பட இயக்குநரான ஜெய்யின் முதல் சினிமா முயற்சி ஆந்திர மெஸ். வித்தியாசமான கதை சொல்லும் முறையில் படமாக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் தமிழில் புதிய டிரெண்ட் செட்டாராக இருக்கும் என்கிறார் ஜெய். மாற்று சினிமாவுக்கான அத்தனை கூறுகளும் இதில் இருக்கும் என்று உறுதி தருகிறார் இவர். பிரசாத் பிள்ளை இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு… Continue reading மாற்று சினிமா முயற்சியில் ஆந்திரா மெஸ்!

‘சரஸ்வதி சபதம்’, இந்த வார ரிலீஸ் படங்கள், கோலிவுட், சினிமா, சினிமா இசை

இந்த வார ரிலீஸ் படங்கள் – முன்னோட்டம்

வரும் வெள்ளிக்கிழமை (29-11-2013) விடியும் முன், ஜன்னல் ஓரம், நவீன சரஸ்வதி சபதம் ஆகியவை ரிலீஸ் ஆகின்றன. ஜன்னல் ஓரம் படத்தில் பார்த்திபன், விமல், விதார்த், ரமணா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். நாயகிகளாக பூர்ணா, மணிஷா யாதவ் நடித்திருக்கிறார்கள். கிராமத்து பின்னணியில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் இயக்குநர் கரு. பழனியப்பன். இசை வித்யாசாகர். ஹாலிவுட்டில் பெரும் வெற்றிப் பெற்ற ஹேங்கோவர் படத்தின் தழுவலான நவீன சரஸ்வதி சபதம் படத்தில் ஜெய்,விடிவி கணேஷ்,சத்யன்,ராஜ்குமார் நடித்திருக்கிறார்கள்.  நாயகி நிவேதிதா தாமஸ். நகைச்சுவை படமான… Continue reading இந்த வார ரிலீஸ் படங்கள் – முன்னோட்டம்

சினிமா

விடியும் முன் : பார் டான்ஸராக நடிக்கிறார் பூஜா!

நான் கடவுள்  படத்திற்கு பிறகு பூஜா நடித்துக் கொண்டிருக்கும் படம் விடியும் முன். விளம்பரப் பட இயக்குநர் பாலாஜி கே. குமார் இயக்கும் முதல் த்ரில்லர் படமான இதில் பூஜா மைய கதாபாத்திரமான பார் டான்ஸர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிகிறது.