மருத்துவம்

இந்தியாவில் 42 லட்சம் பேர் புற்றுநோய்க்கு பலி!

கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் புற்றுநோய் பாதித்து 42 லட்சம் பேர் உயிரிழந்திருப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இதில் ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகியவற்றில் மட்டும் 20.9% பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 7.13 லட்சம் பேரும், மகாராஷ்டிராவில் 3 லட்சத்து 95 ஆயிரம் பேரும், பீகாரில் 3 லட்சத்து 73 ஆயிரம் பேரும் கடந்த 4 ஆண்டுகளில் உயிரிழந்துள்ளனர். மாறிவரும் வாழ்க்கைச் சூழலே புற்றுநோய் அதிகரிப்பதற்கான காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்.