இலக்கியம், தமிழ்நாடு

அபார்ட்மெண்டுக்காக இடித்து தரைமட்டமான தமிழ் தாத்தா உ.வே.சா. இல்லம்!

அழியும் வரலாறு சென்னை திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன்பேட்டையில்  தமிழ் தாத்தா உ.வே.சா. அவர்கள் வாழ்ந்த இல்லம்  கடந்த மாதம் 13 ஆம் தேதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழுக்கு உ.வே.சாமிநாதய்யர் ஆற்றிய பணிகள் ஈடு இணையற்றவை. கும்பகோணம் மற்றும் சென்னை கல்லூரிகளில் தமிழாசிரியராக பணியாற்றியது மட்டுமின்றி, அழியும் நிலையில் இருந்த சீவக சிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம், புறநானூறு, திருமுருகாற்றுப்படை, பத்துப்பாட்டு,  நெடுநல்வாடை உள்ளிட்ட 90க்கும் மேற்பட்ட இலக்கிய ஓலைச்சுவடிகளை புத்தகங்களாக… Continue reading அபார்ட்மெண்டுக்காக இடித்து தரைமட்டமான தமிழ் தாத்தா உ.வே.சா. இல்லம்!

காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, சமையல்

வெயிலுக்கு இதமான வெள்ளரி வெங்காய மோர்!

காய்கறிகளின் வரலாறு –  20 வெள்ளரிக்காய் அணில்வரிக் கொடுக்காய் வாள் போழ்ந்தட்ட காழ்போ னல்விளர் நறுநெய் தீண்டா தடையிடைக் கிடந்த கை பிழிபிண்டம் என்கிற புறநானூறு 246 4-6 பாடலில் அணில்வரிக் கொடுக்காய் எனக் குறிக்கப்படுகிறது வெள்ளரிக்காய். அணிலின் உடம்பின் இருக்கும் கோடுகளை போன்ற கோடுகள் இருப்பதால் இந்தக் காயை அணில்வரிக் கொடுக்காய் என்று அழைத்திருக்கிறார்கள் நம் முன்னோர். இது நம் மண்ணிற்கே உரித்தான ஒரு நீர்க்காய். குளம்,ஏரிவற்றிக்கிடக்கிற வறண்ட ஏப்ரல், மே மாதங்களில் இது விளைந்து மக்களின்… Continue reading வெயிலுக்கு இதமான வெள்ளரி வெங்காய மோர்!

அரசியல், இலங்கை, புத்தம் : ஓர் அறிமுகம், பௌத்த மதம் தமிழ்நாடு வந்த வரலாறு, மதம், மயிலை சீனி. வெங்கடசாமி

பௌத்த மதம் தமிழ்நாடு வந்த வரலாறு!

புத்தம் : ஓர் அறிமுகம் - 2 மயிலை சீனி. வெங்கடசாமி பௌத்த மதம் தமிழ்நாடு வந்த வரலாறு கி. மு. ஐந்தாம் நூற்றாண்டில் கௌதம புத்தரால் வட இந்தியாவில் தோன்றிய பௌத்தமதம், தென் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் எப்போது வந்தது? இந்த மதத்தை முதல்முதல் இங்குக் கொண்டுவந்தவர் யாவர்? இவற்றைப் பற்றி இங்கு ஆராய்வோம். கடைச்சங்க காலத்திற்குப் பின்னர்தான், அதாவது கி. பி. முதலாவது, அல்லது இரண்டாவது நூற்றாண்டுக்குப் பிறகுதான், பௌத்தமதம் தமிழ்நாட்டில் வந்திருக்கக்கூடும் என்று… Continue reading பௌத்த மதம் தமிழ்நாடு வந்த வரலாறு!