காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, சமையல், சைவ சமையல்

முட்டைகோஸ் மசாலா கூட்டு!

காய்கறிகளின் வரலாறு – 28 முட்டைகோஸ் போர்த்துக்கீசியர்களால் 14 அல்லது 17ம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட காய் முட்டைகோஸ். வரலாற்றாசிரியர்கள் முட்டைகோஸின் பிறப்பிடம் பாறை மலைகள் சூழ்ந்த ஐரோப்பிய பிரதேசங்களாக இருக்கலாம் என்கிறார்கள். ஐரோப்பியர்களால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட காய்கறி என்றாலும் இன்று சீனாவுக்கு அடுத்தபடியாக முட்டைகோஸ் விளைச்சலில் இந்தியா இரண்டாவது இடத்தை வகிக்கிறது. அதேபோன்று இந்திய உணவுகளிலும் முட்டைகோஸ் தவிர்க்கமுடியாத இடத்தைப் பிடித்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். எது நல்ல முட்டைகோஸ்? முட்டைகோஸ் விளையும்போது பல்வேறு நோய்த்தாக்குதலுக்கு ஆளாகக்கூடியது.… Continue reading முட்டைகோஸ் மசாலா கூட்டு!

காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, சமையல்

கோடை ஸ்பெஷல் – பலாக்காய் கூட்டு

காய்கறிகளின் வரலாறு – 24 பலாக்காய் முக்கனிகளுள் ஒன்றாக வரலாற்று காலம் முதல் தென்னக மக்களால் கொண்டாடப்பட்ட பலா. அதனால் தெரிந்துகொள்ளலாம் பலாவின் பூர்விகம் நம்மண்ணே என்று. 6லிருந்து 7ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே பலாவை உணவுப்பொருளாக பயன்படுத்தியதற்கான வரலாற்றுச் சான்றுகள் தொல்பொருள் ஆய்வில் கிடைத்துள்ளன. தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய மழைக்காடுகளில் வளரும் மரம் பலா. இதன் கனியின் சுவையை அறிந்துகொண்ட மனிதர்கள், அதை உணவுக்காகப் பயன்படுத்த ஆரம்பித்தனர். தென்னகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பலா… Continue reading கோடை ஸ்பெஷல் – பலாக்காய் கூட்டு

காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, சமையல்

சுண்டைக்காயின் வரலாறு ரெசிபியுடன்

காய்கறிகளின் வரலாறு –  17 சுண்டைக்காய் கத்தரிக்காய் இனத்தைச் சேர்ந்த சுண்டைக்காய், சித்த மருத்துவத்தில் மருத்துவ குணம் மிக்கதாக கருதப்படுகிறது. இது காட்டில் புதர்ச்செடியாக வளரும் சற்றே கசப்பு சுவை அதிகமாக இருக்கும். சமையலுக்காக தற்போது நாம் பயன்படுத்தும் சுண்டைக்காயின் பூர்வீகம் மத்திய அமெரிக்கா. ஐரோப்பியர்களால் ஆசிய, ஆப்பிரிக்க, ஆஸ்திரேலிய, பசிபிக் தீவுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. நம்மைப் போலவே ஜெமைக்கா, பசிபிக் தீவு நாடுகளில் சுண்டைக்காயை உணவில் விரும்பி சேர்த்துக்கொள்கின்றனர். காயாகவும் உலரவைத்தும் உண்ணும் பழக்கம் நம்மைப் போலவே இவர்களிடமும்… Continue reading சுண்டைக்காயின் வரலாறு ரெசிபியுடன்

உடல் மேம்பட, மருத்துவம், முடி உதிர்தல்

பெண்களுக்கு ஏன் முடி உதிர்கிறது?

உடல் மேம்பட டாக்டர் ரத்னவேல் தோல் மற்றும் அழகுக்கலை நிபுணர் பெண்களுக்கான அழகின் அடையாளங்களில் ஒன்றாக முடி கருதப்படுவதால் முடி உதிரும் பிரச்னைக்கு பெண்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதனால்தான் முடி வளர்க்கும் ஷாம்பூ முதலான அழகு சாதனப்பொருட்கள் பெண்களை மையப்படுத்தியே அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன. இவை எந்த அளவுக்கு பயன்தரும் என்பதை பின்னர் பார்ப்போம். இந்த பதிவில் பெண்களுக்கு ஏன் முடி உதிரும் பிரச்னை வருகிறது என்று பார்ப்போம். தலையில் புண், பொடுகு பிரச்னை இருந்தால்… Continue reading பெண்களுக்கு ஏன் முடி உதிர்கிறது?

காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, சமையல்

நேந்திரங்காய் சிப்ஸ் போடுவது எப்படி?

காய்கறிகளின் வரலாறு –  12 வாழைக்காய் பண்டைய தமிழர்களால் கொண்டாடப்பட்ட முக்கனிகளில் மூன்றாவது கனி வாழை. சமூக கலாச்சாரத்தோடு தொடர்பு படுத்தப்பட்ட காய்கனி வகைகளில் வாழை முதன்மையானது. வாழையின் பூர்வீகம் தென்கிழக்கு ஆசியா மற்றும் பப்புவா நியூகினியா என்கிறார்கள் ஆய்வாளர்கள். இந்தப் பகுதிகளில் மனிதர்கள் விவசாயம் செய்ய ஆரம்பித்த காலகட்டத்திலிருந்து வாழையை பயிரிட்டமைக்கான தொல்பொருள் சான்றுகள் கிடைத்திருக்கின்றன. வாழையின் இலை முதல், பூ, காய், கனி, தண்டு என அனைத்தையும் தொன்றுதொட்டு பயன்படுத்தியிருக்கிறார்கள் தென்னக மக்கள். வாழையை அதிக… Continue reading நேந்திரங்காய் சிப்ஸ் போடுவது எப்படி?