மகாபாரத்தை நாவல் வடிவில் எழுதுவதன் மூலம், திரைத் துறையில் நானும், கமல்ஹாசனும் செய்ய முடியாததை எழுத்துத் துறையில் ஜெயமோகன் சாதித்துக் காட்டி உள்ளார் என்று இசையமைப்பாளர் இளையராஜா புகழாரம் சூட்டியுள்ள நிலையில் விமர்சகர் ஞாநி நாவல் குறித்து முரண்பட்ட கருத்தை வெளியிட்டிருக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகன் "வெண்முரசு' எனும் பெயரில் மகாபாரதத்தை நாவல் வடிவில் எழுதி வருகிறார். மொத்தம் 30 ஆயிரம் பக்கங்களில், 30 நாவல்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய நாவல் வரிசையாக "வெண்முரசு' எதிர்காலத்தில் விளங்க வேண்டும்… Continue reading ஜெயமோகனின் வெண்முரசு: இளையராஜாவின் புகழாரமும் ஞாநியின் விமர்சனமும்
Tag: புனைவு
எழுத்தாளர்களுக்கு அரசியல் பார்வை இயல்பாக இருக்கவேண்டும்: ஆர். அபிலாஷ் நேர்காணல்
நாகர்கோவிலைச் சேர்ந்த ஆர். அபிலாஷ், ஆங்கில இலக்கியம் படித்தவர். நடக்க இயலாத மாற்றுத் திறனாளி பெண்ணைப் பற்றிய இவருடைய நாவலான ‘கால்கள்’ (உயிர்மை பதிப்பக வெளியீடு 2012) யுவபுரஸ்கார் விருதை இவருக்கு பெற்றுத் தந்திருக்கிறது. இன்றிரவு நிலவின் கீழ் என்ற ஹைக்கூ கவிதை தொகுப்பின் மூலம் தமிழ் இலக்கியத்துக்கு அறிமுகமான ஆர். அபிலாஷ், கட்டுரை, நாவல் என தன்னுடைய படைப்பு தளத்தை விரிவுபடுத்தியிருக்கிறார். குறிப்பாக பல்வேறு இதழ்களில் விளையாட்டுத் துறை தொடர்பான கட்டுரைகள் எழுதிவருகிறார். ’புரூஸ்லி… Continue reading எழுத்தாளர்களுக்கு அரசியல் பார்வை இயல்பாக இருக்கவேண்டும்: ஆர். அபிலாஷ் நேர்காணல்
கௌதம சித்தார்த்தன் சிறுகதை : தரிசனம்
தரிசனம் கௌதம சித்தார்த்தன் அவன் எனது பிஷப்பை வெட்டி ராஜாவுக்கு செக் வைத்தபோது கதவு தட்டப்பட்டது. எனது கணவராகத்தானிருக்கும். ஆட்டத்தின் சுவாரஸ்யம் சடுதியில் கலைய, நான் அவனைப் பார்த்தேன். அவன் சட்டென எழுந்துபோய் மறைந்து கொண்டான். சேலைத் தலைப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டு எழுந்து போய் கதவைத் திறந்தேன். அவர் பதற்றத்துடன் உள்ளே நுழைந்து நாலாபுறமும் கண்களைச் சுழலவிட்டார். சமீப காலமாக என் கணவருடைய கண்களின் இடுக்கில் குரூரம் மின்ன ஆரம்பித்திருக்கிறது. நெற்றிச் சுருக்கங்களிலும், முகத்திலும் சந்தேக… Continue reading கௌதம சித்தார்த்தன் சிறுகதை : தரிசனம்
நமது சமூகத்தில் பெண்களை ஆண்கள் சரியாக நடத்துகிறார்களா? ஜெயந்தி சங்கர் நேர்காணல்
சிங்கப்பூரில் வசித்துவரும் ஜெயந்தி சங்கர் தமிழ் இலக்கிய பரப்பில் அவிதை, சிறுகதை, புதினம், கட்டுரை, மொழிபெயர்ப்பு என பல தளங்களைல் இயங்கிவருபவர். சீனக் கலாசாரத்தின் மீது தனி ஆர்வத்தினை வளர்த்துக் கொண்டிருக்கும் இவருடைய பெருஞ்சுவருக்குப் பின்னே(உயிர்மை வெளியீடு) மிக முக்கியமான கட்டுரை தொகுப்பு நூல். மனப்பிரிகை (சந்தியா பதிப்பகம்), குவியம் (சந்தியா பதிப்பகம்), திரிந்தலையும் திணைகள் (சந்தியா பதிப்பகம்) ஆகிய புதினங்களும் மனுஷி (மதி நிலையம்), திரைகடலோடி (மதி நிலையம்), தூரத்தே தெரியும் வான்விளிம்பு (சந்தியா பதிப்பகம்),முகப்புத்தகமும்… Continue reading நமது சமூகத்தில் பெண்களை ஆண்கள் சரியாக நடத்துகிறார்களா? ஜெயந்தி சங்கர் நேர்காணல்
ஏக்நாத், நிஜந்தன், புதிய மாதவி, ஜெயந்தி சங்கர், திலகபாமாவுக்கு ஜெயந்தன் நினைவு விருது!
மறைந்த எழுத்தாளர் ஜெயந்தன் நினைவாக செந்தமிழ் அறக்கட்டளை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த இலக்கிய நூல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்படி 2013-ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நிஜந்தன் எழுதிய என் பெயர், ஏக்நாத் எழுதிய கொடை காடு ஆகிய நாவல்கள் ஜெயந்தன் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சிறந்த நாடக நாவலுக்கான விருது க.செல்வராஜ் எழுதிய நரிக்கொம்பு நாவலுக்கும், புதிய மாதவி எழுதிய பெண் வழிபாடு, ஜெயந்தி சங்கர் எழுதிய ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் ஆகிய நூல்கள்… Continue reading ஏக்நாத், நிஜந்தன், புதிய மாதவி, ஜெயந்தி சங்கர், திலகபாமாவுக்கு ஜெயந்தன் நினைவு விருது!