இலங்கை உடனான ராஜ்ஜிய உறவு குறித்த விஷயத்தில் இந்தியாவில் எந்தக் கட்சி ஆட்சியைப் பிடித்தாலும் அவற்றின் நிலைப்பாடு ஒரேமாதிரியானதுதான்!காங்கிரஸ், பாஜக ஐக்கியமாகும் விஷயங்களில் இலங்கை விவகாரத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். இது நேற்று கட்சியில் சேர்ந்த சாதாரண அரசியல் கட்சித் தொண்டனுக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் பல வரலாற்று சிறப்பு மிக்க அரசியல் காட்சிகளை தன் வாழ்நாளில் கண்ட வைகோவுக்கு தெரியாமல் போய்விட்டது! இலங்கை தமிழரின், தமிழக மீனவர்களின் நலனுக்காக பாஜக கூட்டணிக்கு ஓட்டளிங்கள் என்று மக்களவைத் தேர்தலில், பாஜக கூட்டணியில் தமிழகத்தில் முதலில்… Continue reading கூட்டணியில் இருந்து விலகிய வைகோ; ரொம்ப நல்லது சொன்ன எச்.ராஜா
Tag: பிரதமர் மோடி
மத்திய திட்டக்குழு கலைக்கும் அரசின் முடிவுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம்
திட்டக்குழுவை கலைத்து விட்டு அதற்கு பதிலாக வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த மாற்று வழி ஏற்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையின் போது அறிவித்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, பிரதமர் மோடியின் சொல்லுக்கும், செயலுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதாக கூறியுள்ளார். திட்டக்குழு கலைக்கப்படும் என்றால், அக்குழுவின் மூலம் அமல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்களை இனி செயல்படுத்துவது யார்? அதனை கண்காணிப்பது யார் என்று சீதாராம்… Continue reading மத்திய திட்டக்குழு கலைக்கும் அரசின் முடிவுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம்
மோடியை இப்போது எதிர்ப்பது நியாயமல்ல: பின்வாங்கினார் கிரீஷ் கர்னாட்
சினிமா நடிகரும் நாடகக் கலைஞருமான கிரீஷ் கர்னாட், மக்களவை தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மோடி நிறுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். பெங்களூரு தெற்கு தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பிரபல தொழிலதிபர் நந்தன் நீல்கேணிக்கு ஆதரவாக பிரச்சாரத்திலும் ஈடுபட்டார். இந்நிலையில் பிரதமராக மோடி பதவியேற்றிருப்பது பற்றி கேட்டதற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒருவரை எதிர்ப்பது நியாயமல்ல என்று கூறினார். அதோடு மோடி பதவியேற்று 30 நாட்களே ஆன நிலையில் அவரை விமர்சிப்பதும் சரியாக இருக்காது என்று தெரிவித்தார்.
விண்ணப்பித்து 2 ஆண்டுகள் ஆகியும் அரசு கேபிளுக்கு டிஜிட்டல் உரிமம் வழங்கவில்லை: ஜெயலலிதா
விண்ணப்பித்து 2 ஆண்டுகள் ஆகியும் தமிழக அரசின் கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமம் வழங்கப்படவில்லை என்றும் உடனே அதை வழங்கவேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருக்கிறார். இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ’ஏழை மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் கேபிள் தொலைக்காட்சி சேவையை வழங்க கடந்த 2011-ம் ஆண்டு தமிழக அரசு கேபிள் டி.வி. நிறுவனம் உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் 32 மாவட்டங்களிலும் அரசு கேபிள் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால்,… Continue reading விண்ணப்பித்து 2 ஆண்டுகள் ஆகியும் அரசு கேபிளுக்கு டிஜிட்டல் உரிமம் வழங்கவில்லை: ஜெயலலிதா