அரசியல், இந்தியா

மோடியுடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன்: ஜசோதா பென் பேட்டி

பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி ஜசோதா பென் கடந்த 43 ஆண்டுகளாக அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். கடந்த 1968ம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடந்தது. மூன்று ஆண்டுகள் மட்டுமே கணவர் வீட்டில் வசித்து வந்த அவர் பின் தந்தை வீட்டுக்குச் சென்று ஆசிரியர் பயிற்சி முடித்து குஜராத் மாநிலம், வட்காம் மாவட்டத்தில் உள்ள ரஜோசனா கிராமத்தில் ஆரம்பப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றினார். கடந்த 5 ஆண்டுகளுக்கு  முன் பணியில் இருந்து ஓய்வு பெற்ற இவர் தொடர்ந்து… Continue reading மோடியுடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன்: ஜசோதா பென் பேட்டி

அரசியல், இந்தியா

ராபர்ட் வதேரா நில பேரத்துக்கு ஹரியாணா அரசு ஒப்புதல் அளித்த விவகாரம்: தேர்தல் ஆணையம் விசாரிக்க மோடி வலியுறுத்தல்

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 15-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பாஜக, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹரியாணாவில் பிரசாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி ‘ஹரியாணாவை கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான காங்கிரஸ் அரசால் மிகவும் மோசமான நிலைக்கு மாநிலம் தள்ளப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கும், டி.எல்.எஃப். நிறுவனத்துக்கும் இடையேயான நில பேரத்துக்கு ஹூடா… Continue reading ராபர்ட் வதேரா நில பேரத்துக்கு ஹரியாணா அரசு ஒப்புதல் அளித்த விவகாரம்: தேர்தல் ஆணையம் விசாரிக்க மோடி வலியுறுத்தல்

அரசியல், உலகம்

பிரபல பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் மீது மோடி ஆதரவாளர்கள் தாக்குதல்!

நியூயார்க் மேடிசன் ஸ்கொயர் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட கூட்டத்தின்போது மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாயை ஒரு கும்பல் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. டிவி டுடே செய்தி சானலின்  ஆசிரியராக பணியாற்றுகிறார் ராஜ்தீப். இவர் மோடியின் அமெரிக்க சுற்றுப் பயண செய்தி சேகரிப்புக்காக அங்கு போயுள்ளார். நியூயார்க் மேடிசன் ஸ்கொயரில் நடந்த மோடி பேச்சை பதிவு செய்வதற்காக அங்கு சென்றிருந்தபோது, திடீரென மோடி ஆதரவுக் கும்பல் ஒன்று ராஜ்தீப்பை சுற்றி வளைத்துத் தாக்கத் தொடங்கியது.… Continue reading பிரபல பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் மீது மோடி ஆதரவாளர்கள் தாக்குதல்!

அரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள், இலக்கிய விருது, இலக்கியம்

எழுத்தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்திக்கு அஞ்சலி

உலக புகழ்பெற்ற இந்திய எழுத்தாளரும் ஞானபீட விருது பெற்ற அரசிய‌ல் விமர்சகருமான‌ யூ.ஆர்.அனந்தமூர்த்தி (81) வெள்ளிக்கிழமை மாலை பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் காலமானார்.அவரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, முன்னாள் பிரதமர் தேவ கவுடா, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவ‌ர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் தீர்த்தஹள்ளி அருகேயுள்ள மெலிகே கிராமத்தில் 1932 டிசம்பர் 1-ம் தேதி பிறந்த உடுப்பி ராஜகோபாலச்சார்ய அனந்த் மூர்த்தி, இந்துமத… Continue reading எழுத்தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்திக்கு அஞ்சலி

அரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள்

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 600 மத வன்முறைகள்: சோனியா காந்தி தாக்கு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, ஆட்சிக்கு வந்த பிறகு, நாட்டில் மத வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து விட்டன என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறினார். மக்களைவத் தேர்தலுக்குப் பிறகு, முதல் முறையாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு அவர் வந்தார். அங்கு நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு கூறினார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலங்களில் மிக அரிதாகவே சாதி, மத மோதல்கள் நடந்தன. ஆனால், புதிய அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற குறுகிய… Continue reading மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 600 மத வன்முறைகள்: சோனியா காந்தி தாக்கு