அரசியல், தமிழ்நாடு

டுவிட்டரில் ராமதாஸ்!

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் டுவிட்டர் கணக்கில் இணைந்துள்ளார். இது குறித்து பாமக வெளியிட்ட செய்திக் குறிப்பில், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் டுவிட்டர் கணக்குத் தொடங்கியுள்ளார். அவரது டுவிட்டர் கணக்கின் முகவரி  @drramadoss ஆகும்.பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அவர்களின் கீச்சு எனப்படும் Twitter குறுஞ்செய்திகள், புகைப்படங்கள் உள்ளிட்டவை  @drramadoss எனும் அவரது Twitter கணக்கின் வழியாக அவ்வப்போது வெளியாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

அரசியல், இந்தியா

அரசின் பங்குகளை விற்கும் முடிவு கண்டிக்கத்தக்கது: ராமதாஸ் அறிக்கை

பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படும் ; வங்கிகளின் மூலதனத்தை அதிகரிக்கும் வகையில், அவற்றில் உள்ள அரசு பங்குகளின் அளவு 52% ஆக குறைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார். வளர்ச்சி  மற்றும் சீர்திருத்தம் என்ற பெயரில் சீரழிவுக்கு வழிவகுக்கும் இந்த நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கவை. என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-  இந்தியா அடிப்படையில் வேளாண் பொருளாதாரம் சார்ந்த நாடு… Continue reading அரசின் பங்குகளை விற்கும் முடிவு கண்டிக்கத்தக்கது: ராமதாஸ் அறிக்கை