அரசியல், இந்தியா

ஹரியானா முதல்வராகிறார் மனோகர் லால் கட்டார்!

ஹரியானா முதலமைச்சராக மனோகர் லால் கட்டார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி, அம்மாநிலத்தில் முதல் முறையாக ஆட்சியமைக்க உள்ளது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில், பாரதிய ஜனதா 47 இடங்களிலும், இந்திய தேசிய லோக் தளம் கட்சி 19 இடங்களிலும் வெற்றி பெற்றது. ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி 15 இடங்களை மட்டுமே பெற்று, மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. மற்ற 9 இடங்களில் 5 சுயேட்சைகள் உட்பட இதர… Continue reading ஹரியானா முதல்வராகிறார் மனோகர் லால் கட்டார்!

அரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள்

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 600 மத வன்முறைகள்: சோனியா காந்தி தாக்கு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, ஆட்சிக்கு வந்த பிறகு, நாட்டில் மத வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து விட்டன என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறினார். மக்களைவத் தேர்தலுக்குப் பிறகு, முதல் முறையாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு அவர் வந்தார். அங்கு நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு கூறினார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலங்களில் மிக அரிதாகவே சாதி, மத மோதல்கள் நடந்தன. ஆனால், புதிய அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற குறுகிய… Continue reading மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 600 மத வன்முறைகள்: சோனியா காந்தி தாக்கு

அரசியல், அரசியல் பேசுவோம், பெண், பெண் அரசியல்வாதிகள்

மக்களவையின் புதிய சபாநாயகராக சுமித்ரா மகாஜன் பதவியேற்பு

பதினாறாவது மக்களவையின் புதிய சபாநாயகராக சுமித்ரா மகாஜன் தேர்வாகியுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருக்கும் சுமித்ரா, மத்திய பிரதேச மாநிலத்தின் இண்டூர் தொகுதியின் மக்களவை உறுப்பினராக 8 முறை தேர்வானவர். சுமித்ரா மகாஜன் சட்டம் படித்தவர். மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படும் இரண்டாவது பெண் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் என்பது குறிப்பிடத்தகுந்தது.