அரசியல், ஆன்மீகம், தமிழ்நாடு

வள்ளலாரின் இல்லத்தை நினைவிடமாக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

வள்ளலார் வாழ்ந்த ஏழு கிணறு இல்லத்தை நினைவிடமாக மாற்றும் பணியை தமிழக அரசு தொடங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,’வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியவர் வடலூர் இராமலிங்க அடிகளார். அன்பு மற்றும் கருணையை அடையாளமாகக் கொண்டிருந்த வள்ளலாருக்கு சென்னையில் நினைவிடம் அமைப்பதாக அரசு அளித்த வாக்குறுதி 12 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டிருப்பது தான் சோகம். வள்ளலார் என்றதுமே நினைவுக்கு வருவது வடலூர் சத்திய ஞான சபை தான்… Continue reading வள்ளலாரின் இல்லத்தை நினைவிடமாக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

அரசியல், தமிழ்நாடு

தமிழக அரசின் ஊழல்கள்: விசாரணை ஆணையம் கோரி ஆளுனரிடம் வரும் 4ஆம் தேதி பா.ம.க. மனு

 தமிழக அரசின் ஊழல்கள் குறித்து விசாரணை ஆணையம் கோரி ஆளுனரிடம் வரும் 4ஆம் தேதி பா.ம.க. மனு அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாமக வெளியிடப்பட்ட அறிக்கையில் தமிழகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு ஊழல்கள் அதிகரித்து விட்டன. அதுமட்டுமின்றி, கிரானைட் மற்றும் தாது மணல் கொள்ளை தொடர்பான விசாரணைகளில்  திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவை தவிர மற்ற ஊழல்கள் குறித்த தகவல்களையும் திரட்டியுள்ள பாமக, தமிழ்நாட்டில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து… Continue reading தமிழக அரசின் ஊழல்கள்: விசாரணை ஆணையம் கோரி ஆளுனரிடம் வரும் 4ஆம் தேதி பா.ம.க. மனு

அரசியல், தமிழ்நாடு

விதிமுறைகளை மீறி தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: ராமதாஸ் குற்றச்சாட்டு

விதிமுறைகளை மீறி தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதாகவும், மாணவர் சேர்க்கையை முறைப்படுத்த வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ... தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் இரண்டாம் பருவத் தேர்வுகளுக்கான முடிவுகளே முழுமையாக அறிவிக்கப்படாத நிலையில், அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை தனியார் பள்ளிகள் தொடங்கி விட்டன. சில பள்ளிகளில் கடந்த திசம்பர் மாதமே மாணவர் சேர்க்கை முடிவடைந்துவிட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை மாநிலப் பாடத்திட்டம், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன்… Continue reading விதிமுறைகளை மீறி தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: ராமதாஸ் குற்றச்சாட்டு

அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், தமிழ்நாடு

விமான எரிபொருள் ரூ.57.45, பெட்ரோல் ரூ.61.38!

இந்திய வரலாற்றில் முதன்முறையாக  விமான எரிபொருளை விட பெட்ரோல் விலை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஒட்டுமொத்த உலகிலும் இப்படி ஒரு பொருளாதார நிலைப்பாட்டை எந்த ஒரு அரசும் மேற்கொண்டிருக்குமா என்பது ஐயமே?  என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வரும் நிலையில் அதற்கு இணையாக உள்நாட்டில் எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால்… Continue reading விமான எரிபொருள் ரூ.57.45, பெட்ரோல் ரூ.61.38!

அரசியல், தமிழ்நாடு

யூரியா விலைக்கட்டுப்பாடு நீக்கம் வேளாண்மையை அழித்து விடும்:ராமதாஸ்

யூரியா விலைக்கட்டுப்பாடு நீக்கம் வேளாண்மையை அழித்து விடும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் அவர், 'யூரியா மீதான விலைக்கட்டுப்பாட்டை நீக்கவும், அதிகபட்ச விலையை உயர்த்தவும் மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இன்னொருபுறம் அனைத்து மானியங்களையும் படிப்படியாக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக  நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறியிருக்கிறார். மத்திய அரசின் இந்த முடிவுகள் மிகவும் தவறானவை மட்டுமின்றி கடுமையாக கண்டிக்கத்தக்கவை. பசுமைப்புரட்சி என்ற பெயரில் விளைநிலங்களை மலடாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து… Continue reading யூரியா விலைக்கட்டுப்பாடு நீக்கம் வேளாண்மையை அழித்து விடும்:ராமதாஸ்