அரசியல், தமிழகம், தமிழ்நாடு

பட்ஜெட் : கருணாநிதியும் பாராட்டுகிறார், ஜெயலலிதாவும் பாராட்டுகிறார்

எப்போது எதிரணியில் நிற்கும் அதிமுக செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதாவும், திமுக தலைவர் கருணாநிதியும் மத்திய பட்ஜெட் விஷயத்தில் ஒரே அணியாக நிற்கின்றனர். மாற்றத்தை உண்டாக்கும் எவ்வித பொருளாதார அறிவிப்புகளும் இல்லாத இந்த பட்ஜெட்டை வானளாவ புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இருவரும். எல்லாம் ஊழல் வழக்குகளிலிருந்து மத்திய அரசின் தயவை நோக்கியே என்பதை மக்கள் அறிவார்கள் என்பதை இவர்கள் அறியவில்லை போலும். இதோ இந்த சந்தர்ப்பவாதிகளின் வாக்குமூலங்களை அறிக்கைகள் மூலமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள். பட்ஜெட் குறித்து முதல்வர் ஜெயலலிதா… Continue reading பட்ஜெட் : கருணாநிதியும் பாராட்டுகிறார், ஜெயலலிதாவும் பாராட்டுகிறார்

அரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள்

பட்ஜெட் : நடுத்தர தர வர்க்கத்தை திருப்திபடுத்தும் ஜரிகை வேலைகள்!

நடுத்தர தர வர்க்கத்தைச் சார்ந்து நிற்கும் வகையில் சில திருப்திபடுத்தும் ஜரிகை வேலைகள்தான் இந்த பட்ஜெட்டில் உள்ளன என்று கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ‘அடிப்படையில் இந்த பட்ஜெட் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவானது. இதன் உள்நோக்கமே எல்லா துறையிலும் பொது-தனியார் கூட்டு (பிபிபி) முதலீட்டை ஊக்குவிக்க வேண்டும் என்பதுதான். பாதுகாப்புத் துறை, காப்பீட்டுத் துறை ஆகியவற்றில் 49 சதவீத அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்படும் என அறிவித்திருப்பது நாட்டுக்கு பாதகத்தை ஏற்படுத்தும். பொதுத் துறை வங்கிகளின்… Continue reading பட்ஜெட் : நடுத்தர தர வர்க்கத்தை திருப்திபடுத்தும் ஜரிகை வேலைகள்!

அரசியல், இன்றைய முதன்மை செய்திகள்

பட்ஜெட் 2014: அந்நிய நேரடி முதலீட்டுக்கு சிவப்பு கம்பளம்!

தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலையில் பெரிதாக எதிர்பார்க்க வேண்டாம் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தன்னுடைய பட்ஜெட் உரையில் குறிப்பிட்டிருக்கிறார். மக்களவையில் மோடி தலைமையிலான பாஜக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் தன்னுடைய உரையில் புதிய அரசு எதிர்கொண்டுள்ள பல்வேறு பொருளாதார சிக்கல்கள் பற்றி பேசினார் நிதியமைச்சர் அருண் ஜேட்லி.பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் உள்ளதாகவும் பருவமழை பொய்த்து விலைவாசி உயர்வை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பட்ஜெட்டில் அறிவிப்பில் சில துளிகள் பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறை… Continue reading பட்ஜெட் 2014: அந்நிய நேரடி முதலீட்டுக்கு சிவப்பு கம்பளம்!