சமையல், சீசன் சமையல்

சம்மர் ஸ்பெஷல் – பூசணிக்காய் கருவடாம்!

காமாட்சி மகாலிங்கம் இது உளுத்தம் பருப்பில், பூசணித் துருவல் சேர்த்து, உப்பு காரத்துடன்,செய்யும் ஒருவிதக் கருவடாம். கூட்டு,குழம்பு,டால்,மோர்க்குழம்பு,என யாவற்றிலும், வருத்துப்  போட்டால்,செய்யும்,பொருளுக்கு அதிக ருசியை சேர்க்க வல்லது. அப்படியே பொரித்தும், வடாம் மாதிரியும் உபயோகப் படுத்தலாம். இந்தக் கருவடாம் சேர்த்து, வற்றல்க் குழம்பு செய்தால், சாதம் அதிகம் தேவைப்படும். இதிலேயே வெங்காயம்,பூண்டு வகைகள் சேர்த்துச் செய்தால், அந்தப் பிரியர்களுக்கு,ஏன் பிடித்தவர்கள் யாவருக்குமே மிகக் கொண்டாட்டம்தான். உளுத்தம் பருப்புடன்,காராமணி சேர்த்தும் செய்யலாம். இந்த வெயிலிலே வடாம்கள் ஸ்டாக் செய்வது… Continue reading சம்மர் ஸ்பெஷல் – பூசணிக்காய் கருவடாம்!

காமாட்சி, காய்கறி சமையல், சமையல், சீசன் சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல்

மெந்திக்குழம்பில் பச்சை சுண்டையும் பலாக்கொட்டையும்

ருசி காமாட்சி மகாலிங்கம் தீபாவளியெல்லாம் ஆகி பட்சணம் பலகாரம் எல்லாம் சாப்பிட்டு, விருந்துகள் உண்டு,  ஏதாவதொன்று சமைத்து சிம்பிளாக ருசியாக சாப்பிடுவோம் என்று தோன்றுகிறதா,  எனக்கு அப்படி தோன்றியது. எனக்கு பச்சை சுண்டைக்காய் கிடைத்தது. பலாக்கொட்டை இருந்தது. வற்றல்  போட்டுச் செய்வதைவிட  இந்தப் பச்சை சுண்டைக்காய்க் குழம்பு மிகவும் ருசியாக இருக்கும். நாட்டுப் புறங்களில் இந்தச்செடி தானாகவேகூட முளைத்துக் காய்க்கும். பெங்களூரிலிருந்து சென்னை வரும்போது குப்பம் என்ற இடத்தில் ஒரு நிமிஷம் ரயில் நிற்கும்.  சென்னையினின்றும் போகும்… Continue reading மெந்திக்குழம்பில் பச்சை சுண்டையும் பலாக்கொட்டையும்