காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

சுட்ட கத்திரிக்காய் துவையல்

எளிய சமையல் காமாட்சி மகாலிங்கம் நல்ல பெரிய சைஸ் கத்தரிக்காயை அனலில் சுட்டு துவையல் தயாரித்தால் சுவையாக இருக்கும். நான் மைக்ரோவேவில் சுட்டுதான் செய்தேன். மிகவும் நன்றாகத் தோல் உரிக்க வந்தது. உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு விஷயமும் வேண்டும். ஜெனிவா குறிப்புதான் இதுவும், கத்தரிக்காய் என்னவோ இந்தியாவினுடயதுதான். வேண்டியவைகள் : கத்தரிக்காய் பெரியது - 2 வெங்காயம் திட்டமான அளவு -  2 வெள்ளை எள் - 2 டீஸ்பூன் புளி - ஒரு நெல்லிக்காயளவு… Continue reading சுட்ட கத்திரிக்காய் துவையல்

குழந்தைகளுக்கான உணவு, சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல்

வீக் எண்ட் ஸ்பெஷல் – வெந்தியக் கீரை புலவு!

வீக் எண்ட் ஸ்பெஷல் காமாட்சி மகாலிங்கம் இந்த மார்கழி மாதத்தில் வெந்தயக்கீரை பசுமையாக நன்றாக இருக்கும். இதேமாதிரி முள்ளங்கி, புதினா,கொத்தமல்லி யாவும் மிகவும் இளசாகவும், சற்று மலிவாகவும் முன்பெல்லாம் கிடைக்கும். அந்த எண்ணங்கள் இன்றும் நிலவுகிறதெனக்கு.  பச்சைப் பட்டாணியும் கிடைக்கிறது. வெந்தியக்கீரையில் புலவு செய்யும் முறை உங்களுக்குத் தெரியுமா? மிகவும் ருசியாக இருக்கும். நான் வெந்தயக் கீரை ப்ரியை. அடுத்து ரொட்டி வகையும் எழுதுகிறேன். அடையும் தட்டலாம். பிறகு இவைகளைப் பார்க்கலாம். புலவு இதோ. வேண்டியவைகளைப் பார்க்கலாம்.… Continue reading வீக் எண்ட் ஸ்பெஷல் – வெந்தியக் கீரை புலவு!

கோடை கால சீசன் சமையல், சமையல், சைவ சமையல், நீங்களும் செய்யலாம், பருப்புப் பொடி, ருசியுங்கள்

சுலபமாக தயாரிக்கலாம் பருப்புப் பொடி!

ருசியுங்கள் ஒரு அவசரமென்றால் வீட்டில் பருப்புப் பொடி இருந்தால்,சாப்பாட்டை சிம்பிளாக ஒரு வேளை முடித்துக் கொள்ள உதவும் சமய ஸஞ்ஜீவினி இது.. ஒரு பச்சடி, சாதா ரசம்,அப்பளாம், வடாம், வற்றல் என்று பொரித்து சாப்பாட்டை ரசித்து சாப்பிடலாம். இப்போது இவையெல்லாம்,  ஒரு குறிப்பிட்ட கடைகளில் கிடைத்து விடுகிறது. ஆனாலும், நாமாக நமக்கு வேண்டியதைச் செய்வது போலாகுமா? சில பேருக்கு இவைகள் வழக்கத்தில் இல்லாமலும் இருக்கலாம். தெரியாததாகவும் இருக்கலாம். நான் சொல்லி தெரியவைத்து, ருசிபார்த்து  உங்களின் அபிப்ராயங்களைத் தெரிந்து… Continue reading சுலபமாக தயாரிக்கலாம் பருப்புப் பொடி!

சமையல், சீசன் சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல், பாரம்பரிய ரெசிபி, ருசியுங்கள்

வெயில்கால கடுமையைக் குறைக்கும் வாழைத்தண்டு மோர்க்கூட்டு!

ருசி – 6 வேனிற்காலத்தில்  வாழைத்தண்டு உடம்பிற்கு மிகவும் நன்மையை அளிக்கவல்லது. மிகவும் சுலபமாக ருசியாக வாழைத் தண்டில் மோர்க்கூட்டு தயாரிக்கலாம். இதே பக்குவத்தில் புடலங்காய்,  சௌசௌ எனப்படும் பெங்களூர் கத்தரிக்காயிலும் இதைச் செய்தால் நன்றாக வரும். எளிமையான செய்முறை. நான் சொல்லிக்கொண்டே வருகிறேன். உங்களுக்குத் தெரிந்ததாகக்கூட இருக்கலாம். பாருங்களேன். கிராமப்புறங்களில்  மிக எளிதாகக் கிடைக்கும் இந்தத் தண்டில் கறி,  கூட்டு, பச்சடி, வெல்லப் பச்சடி, ஸல்லாத், மோர்க்குழம்பு, மோர்க்கூட்டு  என சொல்லிக்கொண்டே போகலாம். என்ன வேண்டும்?… Continue reading வெயில்கால கடுமையைக் குறைக்கும் வாழைத்தண்டு மோர்க்கூட்டு!