நோய்நாடி நோய்முதல் நாடி - 49 ரஞ்சனி நாராயணன் சுமார் இரண்டு மாதங்களாக இந்தத் தொடரை எழுத முடியாத சூழ்நிலை. மறுபடியும் இப்போது ஆரம்பிக்கிறேன். சொந்தக் கதையை சொல்லிவிட்டு பிறகு தொடரலாம் என்று நினைக்கிறேன். ஒரு முறை தொண்டைப்புண்ணுடன் ஜுரமும் சேர்ந்துகொண்டு வழக்கம்போல காது கொஞ்சம் தகராறு செய்ய ஆரம்பித்தது. மருத்துவர் சொன்னார்: ‘ஜுரம் இறங்கிய பின் வாருங்கள். காதுகளில் சேர்ந்திருக்கும் குரும்பை எடுத்து விடலாம். அதற்கு முன் ஒரு வாரத்திற்கு தினமும் இரவு படுக்கப்போகும் முன்… Continue reading ஒலி மாசு நம்மை எப்படி பாதிக்கிறது?
Tag: நோய்நாடி நோய்முதல் நாடி!
ஹியரிங் எய்ட் கருவிகளின் வளர்ச்சியும் பயன்பாடும்
நோய்நாடி நோய்முதல் நாடி - 48 ரஞ்சனி நாராயணன் இன்று கிடைக்கும் ஹியரிங் எய்ட் கருவிகள் நவீன தொழில்நுட்பத்தின் பிரமாண்ட வளர்ச்சியாகக் கருதப்பட்டாலும், உண்மையில் இவை பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இருந்து வந்தவை தாம். 1551 Girolama Cardano (1501-1576) என்கிற இத்தாலிய மருத்துவர், தத்துவஞானி மற்றும் கணிதமேதை எப்படி ஒலியை காதுக்குள் அனுப்புவது என்று எழுதுகிறார்: ஒரு ஈட்டியின் தண்டை பற்களின் இடையில் வைத்துக்கொண்டு அதன் மூலம் ஒலியை - இதனை அவர் bone… Continue reading ஹியரிங் எய்ட் கருவிகளின் வளர்ச்சியும் பயன்பாடும்
காதுகேளாமையை இப்படி சரிசெய்யலாம்!
நோய்நாடி நோய்முதல் நாடி - 47 ரஞ்சனி நாராயணன் காதுகேளாமை என்பது மிகவும் வருந்தத்தக்க நிலைமை. அமெரிக்காவில் சுமார் 37 மில்லியன் மக்களுக்கு இந்த உலகம் அமைதியானதாகி விட்டது. உரையாடல் என்பது எங்கோ தொலைதூரத்தில் கேட்கும் கிசுகிசுப்பாகவும், இசை என்பது மெல்லிய ரீங்காரம் என்று ஆகியிருக்கிறது என்று ஒரு ஆய்வு சொல்லுகிறது. காது கேளாமை உங்களைத் தனிமைப்படுத்தி விடும். ஆரம்பத்திலேயே இந்தக் குறையை கண்டிபிடித்து சிகிச்சையை மேற்கொள்ளுவது வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும். கொஞ்சம் கொஞ்சமாகக் காது கேட்காமல் போகலாம்.… Continue reading காதுகேளாமையை இப்படி சரிசெய்யலாம்!
காது கொடுத்து கேளுங்கள் காது கேட்காமல் போவதற்கான காரணங்களை!
நோய்நாடி நோய்முதல் நாடி - 46 ரஞ்சனி நாராயணன் எங்கள் உறவினர் ஒருவர் கனடா நாட்டில் இருக்கிறார். ஒருமுறை அவருடன் பேசும்போது சொன்னார்: அங்கிருக்கும் நயாகரா நீர்வீழ்ச்சியின் இரைச்சல் ஆறு ஜெட் விமானங்கள் ஒன்றாகச் சேர்ந்து எழுப்பும் சத்தத்தைவிட அதிகமானதாம். இதை வைத்து ஒரு பயண வழிகாட்டி நயாகரா பார்க்க வந்தவர்களிடம் சொன்னாராம்: ‘இந்த நீர்வீழ்ச்சியின் இரைச்சல் ஆறு ஜெட் விமானங்களின் சப்தத்தைவிட அதிகமானது. அதனால், லேடீஸ்! பேசுவதை நிறுத்துங்கள். அருவியின் சத்தத்தைக் கேட்கலாம்!’ எங்களையெல்லாம் எங்கள்… Continue reading காது கொடுத்து கேளுங்கள் காது கேட்காமல் போவதற்கான காரணங்களை!
தொண்டைக்குத்தான் எத்தனை வேலை?!
நோய்நாடி நோய்முதல் நாடி- 44 ரஞ்சனி நாராயணன் நாம் பேசுவதற்கும், பாடுவதற்கும், மூச்சு விடுவதற்கும், சுவாசிப்பதற்கும் பயன்படுவது தொண்டைதான். ENT எனப்படும் மூன்று உறுப்புகளில் மூன்றாவதாக இருப்பது இந்தத் தொண்டை. அதுமட்டுமல்ல; துக்கத்தில் தொண்டை அடைக்கும். பேச்சு வராது. மிளகாய் தாளித்தால் தொண்டை கமரும். ஜலதோஷம் வந்தால் தொண்டை கட்டும். இரண்டு மூன்று குரல்களில் பேசுவோம். தொண்டையிலே ‘கீச், கீச்’ தான்! நமக்கு ஒத்துக்கொள்ளாத உணவை (ஐஸ்க்ரீம், குளிர்ந்த பொருட்கள்) சாப்பிட்டால் தொண்டை வலிக்கும். இத்தனை பெருமை… Continue reading தொண்டைக்குத்தான் எத்தனை வேலை?!