அறிஞர் மயிலை. சீனி வெங்கடசாமி, ஆன்மீகம், இன்றைய முதன்மை செய்திகள்

சமணர்களின் கடுமையான துறவறம்!

  சமணமும் தமிழும் – 4 அறிஞர் சீனி. வெங்கடசாமி சமணமுனிவர் ஒழுக்கம் வாழ்க்கையை இல்லறம் துறவறம் என்று சமணர் இரண்டுவிதமாகப் பிரித்துள்ளனர். இவ்விரண்டினையும் முறையே சாவக (சிராவக) தர்மம், யதிதர்மம் என்றுங் கூறுவர். இல்லறம் எனப்படும் சாவக தர்மம், மனைவி மக்கள் சுற்றத்தாருடன் இருந்து ஒழுகும் ஒழுக்கம். துறவறமாகிய யதிதர்மம், உலகத்தைத் துறந்து வீடுபேற்றினைக் கருதித் தவஞ் செய்யும் முனிவரது ஒழுக்கம். சமண சமய ஆராய்ச்சிக்கு, யதிகர்மம் எனப்படும் சமண முனிவர் ஒழுக்கத்தை அறியவேண்டுவது இன்றியமையாததாதலின்,… Continue reading சமணர்களின் கடுமையான துறவறம்!

அரசியல், அறிஞர் மயிலை. சீனி வெங்கடசாமி, ஆன்மீகம், புத்தம் : ஓர் அறிமுகம், புத்தம்: ஓர் எளிய அறிமுகம்!, பௌத்த மதம், பௌத்தம், மயிலை சீனி. வெங்கடசாமி

மாட்டுத் தொழுவத்தில் பிறந்த மக்கலி உண்டாக்கிய ஆசிவக மதம்!

புத்தம் : ஓர் அறிமுகம் அறிஞர் மயிலை சீனி. வெங்கடசாமி ஆசீவக மதம் பௌத்த, ஜைன, வைதீக மதங்களைப் போலவே, இந்த ஆசீவக மதமும் வட இந்தியாவில் தோன்றியது. இந்த மதத்தை உண்டாக்கினவர் மஸ்கரிபுத்திரர் என்பவர். பாளிமொழியில் இப்பெயர் மக்கலிபுத்த என்று வழங்கப்படுகின்றது. மாட்டுத் தொழுவம் என்று பொருள்படும் 'கோசால' என்னும் அடைமொழி கொடுத்துக் கோசால மக்கலிபுத்த என்றும் இவர் வழங்கப்படுவர். ஏனென்றால், இவர் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார் என்று சொல்லப்படுகின்றது. தமிழ் நூல்கள் இவரை மற்கலி… Continue reading மாட்டுத் தொழுவத்தில் பிறந்த மக்கலி உண்டாக்கிய ஆசிவக மதம்!

அறிஞர் மயிலை. சீனி வெங்கடசாமி, புத்தம் : ஓர் அறிமுகம், புத்தம்: ஓர் எளிய அறிமுகம்!, மயிலை சீனி. வெங்கடசாமி

குண்டலகேசி அழிந்த வரலாறு!

புத்தம் : ஓர் அறிமுகம் அறிஞர் மயிலை சீனி. வெங்கடசாமி பௌத்தர் இயற்றிய தமிழ் நூல்கள் - குண்டலகேசி ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாகிய இந்த நூல் இப்போது இறந்துபட்டது. 'தருக்கமாவன : ஏகாந்த வாதமும் அனேகாந்த வாதமும் என்பன. அவை குண்டலம், நீலம், பிங்கலம், அஞ்சனம், தத்துவதரிசனம், காலகேசி முதலிய செய்யுட்களுள்ளும் சாங்கிய முதலிய ஆறு தரிசனங்களுள்ளும் காண்க' என்று யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர் 'மாலை மாற்றே சக்கரம் சுழிகுளம்' என்னும் சூத்திர உரையில் கூறியிருப்பதனால், குண்டலகேசி தருக்கநூல் என்பது அறியப்படும்.… Continue reading குண்டலகேசி அழிந்த வரலாறு!

அறிஞர் மயிலை. சீனி வெங்கடசாமி, ஆன்மீகம், புத்தம் : ஓர் அறிமுகம், புத்தம்: ஓர் எளிய அறிமுகம்!, பௌத்த மதம், பௌத்தம், மயிலை சீனி. வெங்கடசாமி

போதி தருமரின் உண்மையான வரலாறு!

புத்தம் ஓர் அறிமுகம் மயிலை சீனி. வெங்கடசாமி தமிழகத்தில் வாழ்ந்த பெளத்தப் பெரியவர்கள் பற்றி பார்த்து வருகிறோம். 6. நாதகுத்தனார் இப்பெயர் நாதகுப்தனார் என்பதன் திரிபு போலும். இவர் குண்டலகேசி என்னும் காப்பியத்தைத் தமிழில் இயற்றியவர். இவர் இந்தக் காவியத்தின் ஆசிரியர் என்பது, நீலகேசி (மொக்கல வாதச் சருக்கம் 78 -ஆம் பாட்டின்) உரையில், புழுக்குலந் தம்மால் நுகரவும் வாழவும் பட்டவினைய வுடம்பு என்னும் அடியை மேற்கோள் காட்டி, இதனை நாதகுத்தனார் வாக்கு என்று குறிப்பிட்டிருப்பதிலிருந்தும் அறியப்படும்.… Continue reading போதி தருமரின் உண்மையான வரலாறு!

புத்தம் : ஓர் அறிமுகம், புத்தம்: ஓர் எளிய அறிமுகம்!, பௌத்த மதம் தமிழ்நாடு வந்த வரலாறு, பௌத்தம், மதம், மயிலை சீனி. வெங்கடசாமி

பவுத்தக் கோயில்களை அழித்துக் கட்டப்பட்ட ஜைனக்கோயில்கள்!

  புத்தம்: ஓர் எளிய அறிமுகம்! மயிலை சீனி. வெங்கடசாமி தமிழ் நாட்டில், செல்வாக்குப் பெறுவதற்காகப் போட்டியிட்ட நான்கு வடநாட்டுச் சமயங்களில் முதல்முதல் வெற்றிபெற்றுச் செல்வாக்கடைந்தது பௌத்தமதம். இந்தச் சமயம் செல்வாக்கடைந்த காரணத்தை இரண்டாம் அதிகாரத்தில் கூறினோம். இச்சமயப் போட்டியில் முற்றும் பின்னடைந்துவிட்டது ஆசீவகமதம். ஆகவே, பௌத்தம், ஜைனம், வைதீகம் என்னும் மூன்று மதங்களுக்கு மட்டுந்தான் பிற்காலத்தில் சமயப்போர் நிகழ்ந்துவந்தது. பௌத்த மதம் முதன்முதல் செல்வாக்கும் சிறப்பும் பெற்றுத் தமிழ்நாட்டில் விளங்கியது என்று கூறினோம். ஆனால், இதன்… Continue reading பவுத்தக் கோயில்களை அழித்துக் கட்டப்பட்ட ஜைனக்கோயில்கள்!