அனுபவம், அழகனே நீராட வாராய், இந்திய அம்மாக்கள், கரு வளர்ச்சி, குடும்பம், குழந்தை பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே, பிரசவ கால பராமரிப்பு, பிரெஸ்லெட், முதல் குழந்தை, ரஞ்சனி நாராயணன்

பிறந்த குழந்தை : நம்பிக்கைகள், உண்மைகள்!

செல்வ களஞ்சியமே - 20 ‘எங்க காலத்துல குழந்தைகள் பிறந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை கண்ணையே திறக்காதுகள். இதென்ன பிறந்த அன்னிக்கே சுத்தி சுத்தி பார்க்கறது?’ என் முதல் பேரன் பிறந்த அன்று என் அம்மா ரொம்பவும் அதிசயமாகக் கேட்டாள். அவன் பிறந்தது இரவு 11 மணிக்கு மேல். வெளியே மழை கொட்டோகொட்டென்று கொட்டித் தள்ளியது.  குழந்தையை ஒரு பச்சை வண்ணத் துணியில் சுற்றி என்னிடம் கொடுத்தார் மருத்துவர். உடலில்  சிலிர்ப்பு! குழந்தையை வாங்கி மாப்பிள்ளையிடம்… Continue reading பிறந்த குழந்தை : நம்பிக்கைகள், உண்மைகள்!

இப்படித்தான் குழந்தையை தாலாட்ட வேண்டும்?, குழந்தை பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, குழந்தைகளுக்கு சொல்லித்தர, செல்வ களஞ்சியமே, தாலாட்டுப் பாடல்கள்

இப்படித்தான் குழந்தையை தாலாட்ட வேண்டும்!

செல்வ களஞ்சியமே – பகுதி 7 குழந்தையை எடுத்து வைத்துக் கொள்ளுவது, நீராட்டுவது, பாலூட்டுவது, தாலாட்டுப் பாடி தூங்கப் பண்ணுவது எல்லாமே குழந்தைக்கும் நமக்கு இருக்கும் பந்தத்தை வலுவாக்கத்தான். குழந்தையுடன் நாம் நிறைய நேரத்தை செலவிடத்தான்; குழந்தைக்கும் நமக்கும் இடையே உள்ள நெருக்கத்தை அதிகப்படுத்திக் கொள்ளத்தான். குழந்தை பிறந்தவுடனே நமக்கு அதன் மேல் பாசம் பெருகிவிடாது. குழந்தை பிறந்த முதல் சில நாட்களுக்கு ஆயாசமே அதிகமாக இருக்கும். குழந்தைக்கு பாலூட்டுவது, இரவில் கண் விழிப்பது, வேறு உலகத்திற்கு… Continue reading இப்படித்தான் குழந்தையை தாலாட்ட வேண்டும்!

இந்திய அம்மாக்கள், குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே

செல்வ களஞ்சியமே! பகுதி-1

‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வ களஞ்சியமே!’ எனக்கு மிகவும் பிடித்த, என் குழந்தைகளுக்கும், என் பேரக் குழந்தைகளுக்கும் பாடிய, பாடப் போகும் பாடல் இது! ஒரு திரைப்படப் பாடல் என்பதைத்தவிர இன்னும் நிறைய இருக்கிறது. ஒரு குழந்தை என்னவெல்லாம் செய்யும்? மழலைச் சொல்லாலே நம் துன்பங்கள் தீர்த்திடும்; முல்லைச் சிரிப்பாலே நமது மூர்க்கத்தைத் தவிர்த்திடும்; குழந்தையின் மூலம் நாம் பெறுவது, ஏடுகள் சொல்லாத இன்பக் கதைகள்! தெய்வத்திற்கு இணையாக, அதற்கும் மேலான அன்பை நம் மேல் பொழியும்… Continue reading செல்வ களஞ்சியமே! பகுதி-1