அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், தமிழ்நாடு

ஜெயலலிதா ஜாமின் மனு: கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் ஜாமின் மனு மீது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது. பகல் 12 மணியளவில் நீதிபதி சந்திரசேகர் முன், ஜாமின் மனு விசாரணைக்கு வருகிறது. அதனுடன் கீழ் நீதிமன்றத்தின் தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களும் விசாரிக்கப்பட உள்ளன. ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியும் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் பவானி சிங்கும் ஆஜராகின்றனர்.